மத்திய அமைச்சரவை
தேர்தல் மேலாண்மை மற்றும் நிர்வாகத் துறையில் ஒத்துழைப்பதற்காக இந்தியா மற்றும் துனிஷியா, பப்புவா நியூகினியா தேர்தல் ஆணையங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
22 JAN 2020 3:40PM by PIB Chennai
தேர்தல் மேலாண்மை மற்றும் நிர்வாகத் துறையில் ஒத்துழைக்க துனிஷியாவின் தேர்தல்களுக்கான சுயேச்சை உயர் ஆணையம், பப்புவா நியூகினியா தேர்தல் ஆணையம் ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தை அனுமதிக்கக் கோரும் சட்டம் இயற்றும் துறை யோசனைக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தாக்கம்
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும். தொழில்நுட்ப ஒத்துழைப்பைக் கட்டமைக்கும் நோக்கம் கொண்டது. இந்தியாவின் சர்வதேச உறவுகளுக்கும் உதவுவதாக இருக்கும்.
பின்னணி
அண்மை ஆண்டுகளில் தேர்தல் ஆணையத்தின் பணிகளால் இந்தியாவின் அரசியல் விவகாரங்களில் மக்களின் பங்களிப்பு அதிகரிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா தற்போது உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடாக விளங்குகிறது. இந்திய ஜனநாயகத்தின் வெற்றி உலகைச் சுற்றியுள்ள அரசியல் முறையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் சிறப்பான செயல்பாடு காரணமாக தேர்தல் தொடர்பான விஷயங்களில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்திக் கொள்ள வெளிநாட்டுத் தேர்தல் அமைப்புகளிடமிருந்து இந்தியத் தேர்தல் ஆணையம் பல்வேறு முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது.
*******
(Release ID: 1600252)
Visitor Counter : 147
Read this release in:
Assamese
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam