மத்திய அமைச்சரவை
தாத்ரா, நாகர் ஹவேலி மற்றும் டாமன், டியு இணைப்பை அடுத்து சரக்கு மற்றும் சேவை வரி, மதிப்பு கூட்டு வரி, கலால் வரி தொடர்பான சட்டங்களில் திருத்தங்கள் / நீடிப்பு / ரத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
22 JAN 2020 3:31PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரி, மதிப்பு கூட்டு வரி, மாநில கலால் வரி தொடர்பான சட்டங்களில் திருத்தங்கள் / நீடிப்பு / ரத்துக்கும் டாமனை தலைநகராக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- மத்திய சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017-ஐ மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (திருத்தங்கள்) முறைப்படுத்தல் 2020 ஆக திருத்தவும்.
- யூனியன் பிரதேச சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017-ஐ யூனியன் பிரதேச சரக்கு மற்றும் சேவை வரி (திருத்தங்கள்) முறைப்படுத்தல் 2020 ஆக திருத்தவும்.
- தாத்ரா, நாகர் ஹவேலி மதிப்பு கூடுதல் வரி முறைப்படுத்தல் 2005-ஐ தாத்ரா, நாகர் ஹவேலி மற்றும் டாமன், டியு மதிப்பு கூடுதல் வரி (திருத்தங்கள்) முறைப்படுத்தல் 2020 ஆக திருத்தவும்.
- டாமன், டியு மதிப்பு கூடுதல் வரி முறைப்படுத்தல் 2005-ஐ தாத்ரா, நாகர் ஹவேலி மற்றும் டாமன், டியு மதிப்பு கூடுதல் வரி (ரத்து) முறைப்படுத்தல் 2020 என ரத்து செய்யவும்.
- கோவா, டாமன், டியு கலால் வரி சட்டம் 1964-ஐ தாத்ரா, நாகர் ஹவேலி மற்றும் டாமன், டியு கலால் வரி (திருத்த) முறைப்படுத்தல் 2020 ஆக திருத்தவும்.
- தாத்ரா, நாகர் ஹவேலி கலால் வரி முறைப்படுத்தல் 2012-ஐ தாத்ரா, நாகர் ஹவேலி கலால் வரி (ரத்து) முறைப்படுத்தல் 2020 என ரத்து செய்யவும்.
- தாத்ரா, நாகர் ஹவேலி மற்றும் டாமன், டியு யூனியன் பிரதேசத்தின் தலைநகராக டாமனை ஆக்குவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பொதுவான வரிவிதிப்பு ஆணையங்களைப் பெறுவதால் “குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்” என்பதற்கும் இரட்டை வேலையைக் குறைப்பதன் மூலம் மக்களுக்கு சிறந்த சேவை வழங்கவும் இந்தத் திருத்தங்கள் வழிவகுக்கும். மேலும் நிர்வாகத் திறனை மேம்படுத்தி ஜிஎஸ்டி, விஏடி, மாநிலக் கலால் தொடர்பான சட்டங்களில் ஒரே சீரான தன்மையைக் கொண்டுவரவும் இது உதவும். மேலும் ஜிஎஸ்டி, விஏடி, மாநிலக் கலால் வரி விதிப்பு, வசூல் மற்றும் நிலுவைத் தொகை வசூலிப்பு ஆகியவற்றில் சட்ட ரீதியான பிரச்சனைகளைத் தவிர்க்கவும் இது உதவும்.
இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஒன்றாடக்கப்பட்டதால் அரசுக்கான செலவு மிச்சப்பட்டிருப்பதோடு வரிவிதிப்பு அதிகாரிகளின் அன்றாட செயல்பாட்டில் சீரான தன்மையும், நிலைத்தன்மையும், தொடர்ச்சியும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
********
(Release ID: 1600155)
Visitor Counter : 132