பிரதமர் அலுவலகம்

மேன்மை மிகுந்த சுல்தான் குவாபூஸ் பின் சாயித் அல் சாயித் காலமானதற்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 11 JAN 2020 8:59AM by PIB Chennai

மேன்மை மிகுந்த சுல்தான் குவாபூஸ் பின் சாயித் அல் சாயித் காலமானதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

``மேன்மைமிகுந்த சுல்தான் குவாபூஸ் பின் சாயித் அல் சாயித் காலமான தகவலை அறிந்து நான் மிகுந்த வருத்தம் அடைந்தேன். ஓமன் நாட்டை நவீன மற்றும் வளமையான நாடாக மாற்றிய, தொலைநோக்கு சிந்தனையுள்ள தலைவராக, அரசு நிர்வாகியாக இருந்தவர் அவர். நமது பிராந்தியம் மற்றும் உலகில் அமைதியை ஏற்படுத்துவதில் அவர் வழிகாட்டியாக இருந்தவர்."'

``இந்தியாவின் உண்மை நண்பராக சுல்தான் குவாபூஸ் இருந்தார். இந்தியாவுக்கும் ஓமனுக்கும் இடையில் துடிப்புமிக்க ராணுவ பங்களிப்பை மேம்படுத்துவதில் வலுவான தலைமையை காட்டியவராக இருந்தார். அவர் என்னிடம் காட்டிய கனிவு மற்றும் பாசத்தை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்'' என்று பிரதமர் தன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேன்மை மிகுந்த சுல்தான் குவாபூஸ் பின் சாயித் அல் சாயித் காலமான தகவலை அறிந்து நான் மிகுந்த சோகம் அடைந்தேன். ஓமன் நாட்டை நவீன மற்றும் வளமையான நாடாக மாற்றிய, தொலைநோக்கு சிந்தனையுள்ள தலைவராக, அரசு நிர்வாகியாக இருந்தவர் அவர். நமது பிராந்தியம் மற்றும் உலகில் அமைதியை ஏற்படுத்துவதில் அவர் ஒளிவழிகாட்டியாக இருந்தவர்.

 

******


(रिलीज़ आईडी: 1599138) आगंतुक पटल : 233
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Kannada