மத்திய அமைச்சரவை

மின்சார விநியோகத் துறையில், இந்தியாவிற்கும் ஜப்பானின் நிலக்கரி எரிசக்தி மையத்திற்கும் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 11 DEC 2019 6:11PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மின்சார விநியோகத் துறையில், இந்தியாவின் மத்திய மின்சார ஆணையம், ஜப்பானின் நிலக்கரி எரிசக்தி மையம் இடையே, ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நீடித்த, நிலையான, குறைந்த அளவிலான கரிமப் பொருளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதன் மூலம், திறன் அதிகரிப்பு மற்றும் சுற்றுச் சூழல் மேம்பாட்டில்  ஜப்பானும், இந்தியாவும் ஒத்துழைக்க, இந்த ஒப்பந்தம் வகைசெய்கிறது.

          ஆய்வு, பயிற்சித் திட்டங்கள் மற்றும் அறிவாற்றல் பகிர்வு நடவடிக்கைகள் மூலம், நீடித்த, நிலையான, குறைந்த அளவிலான கரிமப் பொருளைப் பயன்படுத்தி அனல் மின்சாரம் உற்பத்தி செய்வதில் உள்ள பிரச்சினைகள் மற்றும் தடைகளை விரைவாக களைவதற்கான கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்த இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகைசெய்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சார நிலைமையை மேம்படுத்தவும், அதற்குத் தேவையான கொள்கைகளை இந்திய அரசு விரைவுபடுத்துவதற்கும் உகந்ததாக இந்த ஒப்பந்தம் அமையும்.

]

*****



(Release ID: 1596119) Visitor Counter : 143