பிரதமர் அலுவலகம்

சுப்ரமணிய பாரதியாரை பிரதமர் நினைவுகூர்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 11 DEC 2019 9:58AM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, மாமனிதர் சுப்ரமணிய பாரதியாரை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறார்.

 

மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூர்கிறேன். தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமை, உறுதிமிக்க சுதந்திர உணர்வு மற்றும் அச்சமின்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர். அவரது எண்ணங்களும், பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன.

அனைத்துக்கும் மேலாக, பாரதியார், நீதி மற்றும் சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார். ஒரு முறை அவர், “தனி ஒருவனுக்கு உணவில்லை எனில், ஜெகத்தினை அழித்திடுவோம்” என்றுரைத்தார். மனிதத் துயரங்களைக் குறைப்பதற்கும், அதிகாரம் அளித்தலை மேம்படுத்துவதற்குமான அவரது தொலைநோக்கை இந்தக் கூற்று சுருக்கமாக எடுத்துரைக்கிறது” என்று பிரதமர் கூறியுள்ளார்.

 

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1595845) வருகையாளர் எண்ணிக்கை : 210
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Gujarati , Kannada , Malayalam