மத்திய அமைச்சரவை

இந்தியா-சவுதி அரேபியா இடையே முக்கியத் துறைகளுக்கான பங்களிப்புக் கவுன்சில் அமைக்கும் ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை பின்னேற்பு வழங்கியுள்ளது

Posted On: 27 NOV 2019 11:20AM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இந்தியா-சவுதி அரேபியா இடையே அக்டோபர் 29, 2019 அன்று பிரதமரால் கையெழுத்திடப்பட்ட முக்கியத் துறைகளுக்கான பங்களிப்புக் கவுன்சில் அமைக்கும் ஒப்பந்தத்திற்கு பின்னேற்பு வழங்கப்பட்டது.

முக்கியத் துறைகளுக்கான பங்களிப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் முன்முயற்சிகள் / திட்டங்களின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்குத் தொடர்ச்சியாக இரு நாடுகளின் உயர்நிலை தலைவர்கள் சந்திக்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. முக்கியத் துறைகளின் புதிய பகுதிகளை அடையாளம் காணவும், எட்ட வேண்டிய இலக்குகளை நிர்ணயிக்கவும், பயன்களைக் கண்டறியவும் இந்த ஒப்பந்தம் உதவும்.

பயன்கள்:

     பாலினம், வகுப்பு அல்லது வருமான வேறுபாடு இல்லாமல் சவுதி அரேபியாவுடன் பொருளாதார, வணிக ரீதியான இணைப்புகளை மேம்படுத்த குடிமக்களுக்கு உதவி செய்வதாக இருக்கும்.

     சவுதி அரேபியாவுடனான இந்த ஒப்பந்தம் பாதுகாப்பு, பந்தோபஸ்து, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்திப் பாதுகாப்பு, புதுப்பிக்கவல்ல எரிசக்தி போன்ற முக்கிய துறைகளின் பங்களிப்புக்கான புதிய பாதைகளைத் திறக்கும்.

 

*****



(Release ID: 1593722) Visitor Counter : 116