மத்திய அமைச்சரவை

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019-ன் பிரிவு 73 மற்றும் 74-ன் கீழ் உத்தரவு பிறப்பித்ததற்கு மத்திய அரசு (நடவடிக்கை) விதிகள், 1961-ன் 12-வது பிரிவின்படி மத்திய அமைச்சரவை பின்னேற்பு வழங்கியுள்ளது

Posted On: 20 NOV 2019 10:40PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை,  ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019-ன் பிரிவு 73 மற்றும் 74-ன் கீழ் உத்தரவு பிறப்பித்ததற்கு மத்திய அரசு (நடவடிக்கை) விதிகள், 1961-ன் 12-வது பிரிவின்படி பின்னேற்பு வழங்கியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019 அக்டோபர் 31,    2019-லிருந்து அமலுக்கு வந்ததை அடுத்து, ஏற்கனவே இருந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சட்டமன்றத்துடன் கூடிய ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும், சட்டமன்றம் இல்லாத லடாக் யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 356-ன் கீழ், ஏற்கனவே இருந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி டிசம்பர் 19, 2018-ல் அமல்படுத்தப்பட்டது. இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 356 யூனியன் பிரதேசங்களுக்குப் பொருந்தாது என்பதால், குடியரசுத் தலைவர் ஆட்சி அக்டோபர் 31, 2019 அன்று விலக்கிக்கொள்ளப்பட்டது.

புதிதாக அமைக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், சட்டப்பேரவை அமைக்கப்படவில்லை என்பதால், அரசியல் சட்ட வெற்றிடம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக முந்தைய ஜம்மு-காஷ்மீர் அரசின் ஆளுநர் அளித்த அறிக்கை அடிப்படையில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமலாக்க  ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019 பிரிவு 73-ன் கீழ், குடியரசுத் தலைவர் அக்டோபர் 31, 2019 அன்று உத்தரவு பிறப்பித்தார்.

இதேபோல், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தொகு நிதியத்திலிருந்து செலவு செய்வதற்கு அதிகாரம் அளிக்கும் உத்தரவையும் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் பிரிவு 74-ன் கீழ், அக்டோபர் 31, 2019 அன்று குடியரசுத்தலைவர் பிறப்பித்தார்.

                                           *******


(Release ID: 1592714)