பிரதமர் அலுவலகம்

இந்தியா-பிரேஸில் இடையிலான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்த பிரேஸில் பயணம் எனக்கொரு வாய்ப்பை அளிக்கும்: பிரதமர்

Posted On: 12 NOV 2019 4:00PM by PIB Chennai

பிரேஸில் நாட்டில் நவம்பர் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். ‘புதுமையான எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி’ என்பதே இந்த மாநாட்டின் மையக் கருத்தாகும்.

     “பல்வேறு துறைகளில் நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்து, பிரிக்ஸ் தலைவர்களுடன் விவாதிப்பதை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.  மாநாட்டினிடையே பிரிக்ஸ் வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் நான் உரையாற்றுவதுடன், பிரிக்ஸ் வர்த்தக கவுன்சில் மற்றும் புதிய வளர்ச்சி வங்கியின் நிர்வாகிகளுடனும் கலந்துரையாடவுள்ளேன். பொருளாதார பிணைப்புகளை மேம்படுத்துவது பிரிக்ஸ் நாடுகளுக்கு நன்மை பயக்கும். இந்த பிரேஸில் பயணம், இந்தியா-பிரேஸில் இடையிலான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பிரேஸில் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு வாய்ப்பாக அமையும்.  வர்த்தகம், பாதுகாப்பு, வேளாண்மை மற்றும் எரிசக்தி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த அதிக வாய்ப்புள்ளது” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

நவம்பர் 13 மற்றும் 14-ல் பிரேஸிலில் நடைபெறவுள்ள இந்த ஆண்டிற்கான பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் நான் கலந்து கொள்ளவிருக்கிறேன். புதுமையான எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி’ என்பதே இந்த மாநாட்டின் மையக் கருத்தாகும். “பல்வேறு துறைகளில் நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்து, பிரிக்ஸ் தலைவர்களுடன் விவாதிப்பதை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.  (@narendramodi)

 

 

மாநாட்டினிடையே பிரிக்ஸ் வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் நான் உரையாற்றுவதுடன், பிரிக்ஸ் வர்த்தக கவுன்சில் மற்றும் புதிய வளர்ச்சி வங்கியின் நிர்வாகிகளுடனும் கலந்துரையாடவுள்ளேன். பொருளாதார பிணைப்புகளை மேம்படுத்துவது பிரிக்ஸ் நாடுகளுக்கு நன்மை பயக்கும். (@narendramodi)

 

 

இந்த பிரேஸில் பயணம், இந்தியா-பிரேஸில் இடையிலான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பிரேஸில் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு வாய்ப்பாக அமையும்.  வர்த்தகம், பாதுகாப்பு, வேளாண்மை மற்றும் எரிசக்தி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த அதிக வாய்ப்புள்ளது. (@narendramodi)

 

******

 



(Release ID: 1591467) Visitor Counter : 96