பிரதமர் அலுவலகம்

ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே உடன் பிரதமர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 04 NOV 2019 11:10AM by PIB Chennai

பாங்காக்கில் நடந்த ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு 2019 -ன் போது 2019 நவம்பர் 4 ஆம் தேதி ஜப்பான் பிரதமர் மதிப்பிற்குரிய ஷின்ஸோ அபே -வை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.

கடந்த நான்கு மாதங்களில் இரு தலைவர்களும் மூன்று முறை சந்தித்துப் பேசியுள்ளனர். இதற்கு முன் 2019 செப்டம்பரில் விளாடிவோஸ்டோக்கில் இருவரும் சந்தித்துப் பேசினர்.

ஜப்பான் பேரரசருக்கு மகுடம் சூட்டப்பட்டதற்கு,  பிரதமர் திரு.மோடி, அபே -வுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இந்திய குடியரசுத் தலைவர் பங்கேற்றதை பிரதமர் அபே கனிவுடன் நினைவுகூர்ந்தார்.

அடுத்த மாதம் நடைபெறும் இந்தியா - ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் பிரதமர் இந்தியா வரவிருக்கும் நிகழ்வுக்காக ஆர்வத்துடன் காத்திருப்பதாக பிரதமர் திரு. மோடி தெரிவித்துக் கொண்டார்.  இந்திய - ஜப்பான் சிறப்பு பாதுகாப்பு மற்றும் உலகளாவிய பங்கேற்பை தீவிரப்படுத்துவதில், வரவிருக்கும் உச்சி மாநாடு வெற்றிகரமானதாக ஆக்கும் என்பதில் தமக்கு நம்பிக்கை உள்ளதாக அவர் தெரிவித்தார்.

உயர்நிலை பரிமாற்றங்கள் மூலமாக, இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார ஈடுபாடு அதிகரித்திருப்பதற்கு இரு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். மும்பை - அகமதாபாத் அதிவேக ரயில் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு மேற்கொண்டனர். அந்தத் திட்டத்தை சுமுகமாக செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான பரஸ்பர முயற்சிகள் எடுப்பதில் இரு தரப்பினரும் உறுதி தெரிவித்துக் கொண்டனர்.

வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு அமைச்சக அளவில் 2+2 பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு இரு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். இரு தரப்பினருக்கு இடையில் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு உத்வேகம் அளிப்பதாக இந்தப் பேச்சுவார்த்தை இருக்கும் என்பதில் இருவரும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர். 

அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் வளமையை மேம்படுத்துவதற்கு இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான, திறந்தநிலையிலான, வெளிப்படைத் தன்மையான பங்கேற்பு நிலையிலான செயல்பாடுகளை மேம்படுத்துவதில் இரு தலைவர்களும் உறுதி தெரிவித்தனர். இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, வளமை மற்றும் முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் இணைந்து பணியாற்றுவதற்கு, மூன்றாம் தரப்பு நாடுகள் உள்பட இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1590493) வருகையாளர் எண்ணிக்கை : 219
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Telugu , Kannada