பிரதமர் அலுவலகம்

2019 நவம்பர் 2 முதல் 4 வரை பிரதமர் தாய்லாந்து பயணம்

Posted On: 02 NOV 2019 11:03AM by PIB Chennai

தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று  பயணம் மேற்கொள்கிறார். ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு, கிழக்கு ஆசிய உச்சிமாநாடு, பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு உரையாடல் கூட்டம் உட்பட ஆசியான் தொடர்பான பல்வேறு உச்சி மாநாடுகளில் அவர் பங்கேற்பார். உலகத் தலைவர்களுடன் இருதரப்பு மற்றும் முக்கியமான உலகப் பிரச்சனைகள் குறித்து அவர் பேச்சுநடத்த உள்ளார்.

ஆசியான் தொடர்பான உச்சி மாநாடுகள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு முக்கியமான அம்சம் என்றும், அதிலும் குறிப்பாக நமது கிழக்கு நாடுகளுடன் செயல்படும் கொள்கைக்கு முக்கியமானது என்றும் தமது புறப்பாட்டு அறிக்கையில் பிரதமர் கூறியுள்ளார். கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர், இந்தோ-பசிபிக் பகுதிக்கான நமது தொலைநோக்குப் பார்வையை தெரிவிக்க இது ஒரு வாய்ப்பை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு பாங்காக்கில் நடைபெறும் சமூக நிகழ்ச்சியில் ‘ஸ்வஸ்தீ பிரதமர் மோடி’ என்ற பொருளில் பிரதமர் உரையாற்றுவார். தாய்லாந்தில் உள்ள இந்திய சமூகத்தவரின் பங்களிப்புகள் குறித்து பாராட்டுத் தெரிவித்துள்ள பிரதமர், அவர்களுடன் கலந்துரையாடுவதை தாம் எதிர்நோக்கி இருப்பதாக கூறியுள்ளார்.

*****



(Release ID: 1590078) Visitor Counter : 58