பிரதமர் அலுவலகம்
ஷில்லாங் பேராயர் அருட்திரு டோம்னிக் ஜலா மறைவுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
12 OCT 2019 10:34AM by PIB Chennai
ஷில்லாங் பேராயர் அருட்திரு டோம்னிக் ஜலா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
பேராயரின் மறைவுச் செய்தியை அறிந்து மிகவும் துயருற்றதாக பிரதமர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அருட்திரு டோம்னிக் ஜலா, “சமுதாயத்திற்கு அப்பழுக்கற்ற முறையில் ஆற்றிய சேவைகளுக்காக என்றும் நினைவுகூரத்தக்கவர், மேகாலயாவின் வளர்ச்சியில் அக்கறை காட்டியவர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்றும் திரு மோடி தெரிவித்துள்ளார்.
|
ஷில்லாங் பேராயர் டோம்னிக் ஜலா-வின் மறைவுச் செய்தியை அறிந்து மிகவும் துயருற்றேன்.
சமுதாயத்திற்கு அப்பழுக்கற்ற முறையில் ஆற்றிய சேவைகளுக்காக என்றும் நினைவுகூரத்தக்கவர்.
மேகாலயாவின் வளர்ச்சியில் அக்கறை காட்டியவர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்: பிரதமர்
— PMO India (@PMOIndia) October 12, 2019
|
ஷில்லாங் பேராயர் டோம்னிக் ஜலா, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 12 அக்டோபர் 2019 அன்று ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார்.
டான் போஸ்கோ செலேசியன் திருச்சபையின் பாதிரியாக நவம்பர் 19, 1977-ல் பொறுப்பேற்றவர் அவர். குவஹாத்தி மாகாண கத்தோலிக்க கூட்டமைப்பின் நிர்வாகியாக செயல்பட்டு வந்த அவர், 1999 டிசம்பரில் ஷில்லாங் பேராயராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.
*********
(रिलीज़ आईडी: 1587898)
आगंतुक पटल : 161