பிரதமர் அலுவலகம்

பாலைவனமயமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐ.நா. சிறப்பு மாநாட்டின் 14வது மாநாடு உயர் மட்டப் பிரிவு கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை உரையாற்றுகிறார்


இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை சீனாவிடமிருந்து அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது

Posted On: 08 SEP 2019 8:02PM by PIB Chennai

பாலைவனமயமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐ.நா. சிறப்பு மாநாட்டின் உயர் மட்ட பிரிவு கூட்டத்தில் இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை உரையாற்றுகிறார். இந்த மாநாடு உத்திரப் பிரதேச மாநிலத்தின் நொய்தா விரிவாக்கப் பகுதியில் நடைபெறுகிறது.

சீனாவிடமிருந்து அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்ட தருணத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. சுற்றுச் சூழல் தொடர்பான விஷயங்கள், குறிப்பாக நில மேலாண்மை குறித்த உலகளாவிய கலந்துரையாடலுக்கு  உதவுவதாக இந்த மாநாடு அமையும். பருவநிலை மாற்றம், பன்முக உயிரியல் தன்மை, நில மேலாண்மை ஆகிய ரியோ சிறப்பு மாநாட்டின் மூன்று சிறப்பு தீர்மானம் தொடர்பான அனைத்து நாடுகளின் கூட்டங்களை நடத்திய பெருமையும் இந்தியாவிற்கு சேர்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

 

இந்த மாநாட்டின்போது அரசுகள், அரசுமுறை சாரா அமைப்புகள், அரசுகளுக்கு இடையேயான அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள், அமைச்சர்கள், விஞ்ஞானிகள், பெண்கள், இளைஞர்கள் என 197 நாடுகளைச் சேர்ந்த சுமார் 7,200 பேர் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் நிலப் பயன்பாடு குறித்த கொள்கைகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கட்டாயமான இடப்பெயர்வு, மணல் மற்றும் தூசிப்புயல்கள், வறட்சிகள் போன்ற உருப்பெற்று வரும் அச்சுறுத்தல்களை கையாளும் வகையிலும் சுமார் 30 முடிவுகளை இந்தப் பிரதிநிதிகள் மேற்கொள்வார்கள்.

 

 

*****



(Release ID: 1584528) Visitor Counter : 125