மத்திய அமைச்சரவை
மாஸ்கோவில் இஸ்ரோவின் தொழில்நுட்ப தொடர்பு கூடத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
31 JUL 2019 3:39PM by PIB Chennai
ரஷ்ய நாட்டிலுள்ள மாஸ்கோ நகரத்தில் இஸ்ரோவின் தொழில்நுட்ப தொடர்பு கூடத்தை அமைப்பதற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இந்த கூடத்தில் பணிபுரிவோருக்கான ஊதியம், அலுவலக செலவுகள், வாடகை, வரிகள் ஆகியவற்றுக்கு ஓராண்டுக்கு ரூ.1.5 கோடி செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரோவின் தொழில்நுட்ப தொடர்பு கூடத்தில் பணிபுரியவுள்ள தொடர்பு அலுவலர், ரஷ்யாவிலும், அண்டை நாடுகளிலும், இஸ்ரோவின் செயல்திட்ட இலக்குகள் தொடர்பான பணிகளை ஒருங்கிணைப்பார். அந்த நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்களையும், அரசு அமைப்புகள் மற்றும் தொழில்துறை நிறுவனத்தினரை சந்தித்து, விண்வெளித் துறையில் இஸ்ரோ மேற்கொண்டு வரும் ஆய்வுகள் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான வளர்ச்சிகள் குறித்த விவரங்களை எடுத்துரைப்பார்.
*****
(रिलीज़ आईडी: 1580851)
आगंतुक पटल : 302
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam