பிரதமர் அலுவலகம்

4-வது சுற்று அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு – 2018-ன் முடிவுகளை பிரதமர் வெளியிடவுள்ளார்

Posted On: 28 JUL 2019 4:53PM by PIB Chennai

4-வது முறையாக அகில இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் புலிகள் கணக்கெடுப்பு, 2018-ன் முடிவு விவரங்களை, பிரதமர் திரு. நரேந்திர மோடி, லோக் கல்யாண் மார்கில் திங்களன்று (29.07.2019) வெளியிடவுள்ளார்.

      பரப்பளவு, மாதிரி அளவீட்டின் தாக்கம் மற்றும் கேமரா கண்காணிப்பு அளவுகளில், இந்தப் புலிகள் கணக்கெடுப்புப் பணி, உலகின் மிகப்பெரிய வனவிலங்கு கணக்கெடுப்பாகக் கருதப்படுகிறது.

      இந்தியாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அகில இந்திய அளவில் புலிகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. 2006, 2010 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

      இந்தக் கணக்கெடுப்பை மேற்கொண்டுவரும் மத்திய அரசும், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையமும், பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகளை தணிக்க, புலிகளின் பொருளாதார மதிப்புப் பற்றிய கணக்கெடுப்பையும் மேற்கொண்டுள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் அமைப்பு ரீதியாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய, சட்ட ரீதியான புலிகள் பாதுகாப்புத் திட்டம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.   

 

*****


(Release ID: 1580593) Visitor Counter : 204