மத்திய அமைச்சரவை

தொழில் சார்ந்த பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிநிலைக்கான மசோதா 2019-க்கு அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 10 JUL 2019 6:04PM by PIB Chennai

13 மத்திய தொழிலாளர் சட்டங்களின் சாரம் புதிய மசோதாவில் கொண்டுவரப்பட்டுள்ளது

அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரிடமும் நம்பிக்கை என்ற உணர்வுடன்  பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, வாழ்க்கையின் பலதரப்பட்ட மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து  பாடுபட்டு வருகிறது. இந்த நோக்கத்துடன்  தொழில் சார்ந்த பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிநிலைக்கான மசோதா 2019-ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய பிரதமர் திரு நரேநதிர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.  தற்போதுள்ள சூழலோடு ஒப்பிடும்போது, இந்த முடிவு தொழிலாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம், பணி நிலைமைகளுக்கான வசதிகளைப் பலமடங்கு விரிவாக்கும்.

      13 மத்திய தொழிலாளர் நல சட்டங்களில் உள்ள பொருத்தமான அம்சங்களை இணைத்துக்கொண்டு எளிமையானதாகவும், முற்போக்கானதாகவும்  புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. புதிய மசோதா சட்டவடிவம் பெறும்போது இந்த சட்டங்களில் உள்ள அம்சங்கள் அதில் இடம் பெற்றுவிடும் என்பதால் பழைய சட்டங்கள் ரத்து செய்யப்படும்.

---


(रिलीज़ आईडी: 1578223) आगंतुक पटल : 318
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam