மத்திய அமைச்சரவை
உயிரியல் மற்றும் மருத்துவத்தில் உயரமான பகுதியில் கூட்டு ஆராய்ச்சிப் பணி மேற்கொள்ள இந்தியா மற்றும் கிர்கிஸ்தான் இடையே கூட்டு முயற்சி மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
12 JUN 2019 8:10PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் உயிரியல் மற்றும் மருத்துவத்தில் உயரமான பகுதியில் கூட்டு ஆராய்ச்சிப் பணி மேற்கொள்ள இந்தியா மற்றும் கிர்கிஸ்தான் இடையே கூட்டு முயற்சி மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது அறிவியல் மற்றும் மருத்துவத்தில், குறிப்பாக உயரமான பகுதிகளில் உயிரியல் மற்றும் மருத்துவத்தில் பரஸ்பர உறவுகளை மேம்படுத்துவதையும், வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கும்.
இந்திய, கிர்கிஸ்தான் ராணுவத்தினர் / மக்கள் மத்தியில், உயர்ந்த மலைப் பகுதிகளில் ராணுவ வீரர்களின் உடல் மற்றும் மனநலம் சார்ந்த விஷயங்களைப் புரிந்து கொள்ளவும், யோகா, மூலிகைகள் மற்றும் ஊட்டச்சத்து மாற்று மருந்துகள் மூலம் அந்தப் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவது குறித்த புரிதல் ஏற்படுவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
(रिलीज़ आईडी: 1574224)
आगंतुक पटल : 213