பிரதமர் அலுவலகம்

இந்திய பிரதமருக்கு ஆஸ்திரேலியா பிரதமர் தொலைபேசி மூலம் வாழ்த்து

Posted On: 24 MAY 2019 12:10PM by PIB Chennai

17 வது மக்களவை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதை முன்னிட்டு, ஆஸ்திரேலியா பிரதமர் திரு ஸ்காட் மோரிசன் மே 23, 2019 அன்று  பிரதமர் திரு நரேந்திர மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

 

ஆஸ்திரேலியாவுடனான தனது உறவை மேம்படுத்திக் கொள்வதில் இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் வலுவான பிரகாசமான ஜனநாயகம் என்றும், விரிவப்படுத்தப்படும் பொருளாதார ஒத்துழைப்பு, வளர்ந்து வரும் உயர் நிலை கலந்துரையாடல்கள், மக்களிடையேயான வலுவான உறவு ஆகியவை நமது உறவை வலுப்படுத்துவதை தொடர்ந்து உறுதி செய்யும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

 

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் லிபரல் – நேஷனல் கூட்டணி கட்சி வெற்றி பெற பிரதமர் மோரிசனின் வழிகாட்டுதலுக்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார். பிரதமர் மோரிசன், இந்தியாவுக்கு  வருகை தருமாறு பிரதமர் மீண்டும் அழைப்பு விடுத்தார்.


 


(Release ID: 1572485) Visitor Counter : 149