மத்திய அமைச்சரவை

தில்லி மெட்ரோ 4ஆம் கட்ட திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

3 வழித்தடங்களில் 61.679 கிலோ மீட்டர் தூரத்திற்கு 17 சுரங்கப்பாதை மற்றும் 29 உயர்நிலை ரயில் நிலையங்கள்
ஏரோசிட்டிக்கும் துக்ளகாபாதுக்கும் இடையே 15 ரயில் நிலையங்கள்
ஆர்.கே.ஆஷ்ரமத்திலிருந்தில் ஜனக்புரி மேற்கிற்கு இடையே 25 ரயில் நிலையங்கள்
மவுஜ்பூருக்கும் முகுந்த்பூருக்கும் இடையே 6 ரயில் நிலையங்கள்

Posted On: 07 MAR 2019 2:28PM by PIB Chennai

தில்லி மெட்ரோவில் 3 வழித்தடங்களை உள்ளடக்கிய 4-ஆம் கட்ட திட்டத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 3 வழித்தடங்கள் மொத்தம் 61.679 கிலோ மீட்டர் நீளமானதாகும். மொத்தமுள்ள 61.679 கிலோ மீட்டரில்  22.359 கிலோ மீட்டர் சுரங்கப்பாதையாகவும், 39.320 கிலோ மீட்டர் உயர் நிலையிலும் கட்டப்படும். இவ்வழித்தடங்களில் உள்ள 46 ரயில் நிலையங்களில் 17 ரயில் நிலையங்கள் சுரங்கப்பாதையிலும் மீதமுள்ள 29 ரயில் நிலையங்கள் உயர்நிலை தளங்களிலும் கட்டப்படும்.

இந்த 3 வழித்தடங்களும், ரூ.24,948.65 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்படும். இந்தத் திட்டம் தில்லி மெட்ரோ ரயில் கழகம், மத்திய அரசின் தற்போதுள்ள 50:50 சிறப்பு நோக்க வாகன அமைப்பு மற்றும் தில்லியில் தேசிய தலைநகர் பிரதேச அரசு ஆகியவற்றால் செயல்படுத்தப்படும்.

                                *****



(Release ID: 1568048) Visitor Counter : 103