மத்திய அமைச்சரவை

முன்னாள் படை வீரர் பங்களிப்பு சுகாதார திட்டத்தின் கீழ் 2ஆம் உலகப்போர் வீரர்கள், அவசரக்கால நியமன அதிகாரிகள், குறுகிய பணிக் கால நியமன அதிகாரிகள் மற்றும் பணிக் காலத்திற்கு முன்பு பணி ஓய்வுபெறுபவர்களின் மருத்துவ வசதிக்கான அனுமதிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

40,000-த்திற்கும் மேற்பட்ட நபர்கள் பயன்பெறுவார்கள்

Posted On: 07 MAR 2019 2:18PM by PIB Chennai

முன்னாள் படை வீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தின் கீழ் 2ஆம் உலகப்போர் வீரர்கள், அவசரக்கால நியமன அதிகாரிகள், குறுகிய பணி கால நியமன அதிகாரிகள் மற்றும் பணிக் காலத்திற்கு முன்பு பணிஓய்வு பெறுபவர்களின் மருத்துவ வசதிக்கான அனுமதிக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதனால் முன்னாள் படை வீரர்  பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தின் கீழ் இதுவரை சேர்க்கப்படாத 43,000 நபர்கள், முன்னாள் படை வீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தின் கீழ் பணமில்லா மருத்துவ சிகிச்சை பெறும் பலன் கிடைக்கப் பெறுவார்கள். சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு முன்னாள் படை வீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தின் கீழ் 425 சிறு மருத்துவமனைகள், பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 2,500க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் வழியாக இவர்கள் இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

போர்க் கைம்பெண்களுக்கு, முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தின் ஒருமுறை பங்களிப்பிலிருந்து விலக்கு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் தொடங்கப்பட்ட முன்னாள் படை வீரர்  பங்களிப்பு சுகாதாரத்திட்டம் 54 லட்சம் ஓய்வூதியம் பெறும் முன்னாள் படை வீரர்கள், அவர்களை சார்ந்திருப்பவர்கள் மற்றும் இதரப் பிரிவினர், தரமுள்ள மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு வழிவகுக்கிறது.

                                    *****



(Release ID: 1567901) Visitor Counter : 133