மத்திய அமைச்சரவை

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மீன்வளத்துறைக்கு ஒரு செயலாளர் பதவியையும், ஒரு இணைச் செயலாளர் பதவியையும் உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 19 FEB 2019 9:07PM by PIB Chennai

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மீன்வளத்துறை சுமூகமாக  செயல்படுவதையும் கடமையை நிறைவேற்றுவதையும் உறுதி செய்ய இந்தத் துறையில் நிரந்தரமாக  17-ம் நிலையில் ஒரு செயலாளர் பதவியையும் (ரூ.2,25,000 - நிலையானது), 14-ம் நிலையில் மாறும் ஊதியத்துடன் (ரூ.1,44,200 – 2,18,200) ஒரு இணைச் செயலாளர் பதவியையும் உருவாக்கப்  பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்  அளித்துள்ளது.

பெரும் எண்ணிக்கையிலான மீனவர்களின் நலன் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், இந்தத் துறையின் வளர்ச்சிக்கான நீண்டகால  / உடனடி திட்டங்களை மேற்கொள்ளவும் / கண்காணிக்கவும் வசதியாக புதிய பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

-----------


(Release ID: 1565383) Visitor Counter : 130