பிரதமர் அலுவலகம்

கர்நாடகா ஹூப்ளிக்கு பிரதமர் வருகை

1.5 மில்லியன் மெட்ரிக் டன் மங்களூரு திறன் மிகுந்த பெட்ரோலிய இருப்பு வசதி மற்றும் 2.5 மில்லியன்; மெட்ரிக் டன் படூர் திறன் மிகுந்த பெட்ரோலிய இருப்பு வசதியை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
ஐ ஐ டி தர்வாடு மற்றும் ஐ ஐ ஐ டி தார்வாடு ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்
பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 2,350 பயனாளிகளின் ஈ-கிரஹப்பிரவேசத்தைப் பார்வையிட்டார்
பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் துவக்கி வைத்தார்

Posted On: 10 FEB 2019 8:27PM by PIB Chennai

ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ஒருநாள் அரசுமுறைப் பயணத்தின் கடைசி சுற்றாக கர்நாடகாவின் ஹூப்ளிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வருகை தந்தார். அங்கு கப்பூர் என்ற இடத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் துவக்கி வைத்தார்.

தார்வாடு இந்திய  தொழில்நுட்பக் கழகம் மற்றும் தார்வாடு இந்திய தகவல்  தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டியதை குறிக்கும் வகையிலான பெயர் பலகையை பிரதமர் திறந்து வைத்தார்.

இவ்விழாவில் தார்வாடு நகர எரிவாயு விநியோகத் திட்டமும் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.   மக்களுக்கு தூய்மையான எரிபொருள் அதிக அளவில் கிடைக்கும் வகையில் நகர எரிவாயு விநியோக தொகுப்பை விரிவாக்கம் செய்வதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு  வருகிறது.

எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்திய திறன் மிகுந்த பெட்ரோலியம் ரிசர்வ் நிறுவனத்தின் மங்களூரு 1.5 மில்லியன் மெட்ரிக் டன் திறன் மிக்க  பெட்ரோலிய கையிருப்பு வசதி மற்றும் படூர் 2.5 மில்லியன் மெட்ரிக் டன் திறன் மிகுந்த பெட்ரோலிய கையிருப்பு வசதி ஆகியவை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.

சிக்ஜாஜுர்-மாயக்கொண்டா பிரிவில் 18 கிலோ மீட்டர் தூர இரட்டை ரயில்பாதை திட்டத்தை பிரதமர் திரு மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.  

சிக்ஜாஜுர் – மாயகொண்டா பிரிவு, 190 கிலோ மீட்டர் தூர ஹூப்ளி – சிக்ஜாஜுர் இரட்டை ரயில்பாதை திட்டத்தின் ஒரு பகுதியாகும். தென்மேற்கு ரயில்வேயின் பெங்களூரு – ஹூப்பள்ளி வழித்தடத்தில் இது அமைந்துள்ளது. இரட்டை  ரயில்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த முக்கிய வழித்தடத்தில் பெங்களூருவை, ஹூபள்ளி, பெலாகவி, கோவா, புனே மற்றும் மும்பை ஆகிய நகரங்களை இணைத்து அதிவேக ரயில் போக்குவரத்துத் திறனை அதிகரிக்கும். 

அனைவருக்கும் வீட்டு வசதி என்ற உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில், பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் தார்வாடு நகரில் 2,350 வீடுகளின் மின்னணு கிரஹப்பிரவேசத்தை பிரதமர் பார்வையிட்டார்.

-------



(Release ID: 1563792) Visitor Counter : 120