மத்திய அமைச்சரவை

வேளாண் தொழிலுக்கான சுற்றுச்சூழல் முறைகளை மேம்படுத்த இந்தியா, மாலத்தீவுகள் இடையே இருதரப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 06 FEB 2019 9:51PM by PIB Chennai

மாலத்தீவு அதிபர் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்த போது, கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதியன்று, மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்திற்கும், மாலத்தீவு மீன்வளம் கடல்வளம் மற்றும் வேளாண்மை அமைச்சகத்திற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று பின்னேற்பு ஒப்புதல் அளித்துள்ளது.

 

வேளாண் கணக்கெடுப்பு, வேளாண் தொழில், ஒருங்கிணைந்த வேளாண் முறை, நீர்ப்பாசனம், மேம்படுத்தப்பட்ட விதைகள், மண்வள மேலாண்மை, ஆராய்ச்சி, உள்ளூர் வேளாண் தொழில்களின் திறன் மேம்பாடு, உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து துறைகளில் தொழில்முனைவோரின் அறிவை மேம்படுத்துதல், பருவநிலையை எதிர்கொள்ளும் வேளாண் முறை, பூச்சிக்கொல்லி மிச்சங்களை பரிசோதிக்கும் வசதிகளை நிறுவுதல் ஆகிய துறைகளில் வேளாண் தொழில் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு இந்த   உடன்படிக்கை வழிவகுக்கும்.


விகீ



(Release ID: 1563073) Visitor Counter : 152