மத்திய அமைச்சரவை
சுற்றுலா துறையில் இந்தியா - ருமேனியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
10 OCT 2018 1:36PM by PIB Chennai
சுற்றுலா துறையில் இந்தியா - ருமேனியா இடையே ஏற்கனவே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. செப்டம்பர் 2018-ல் ருமேனியா நாட்டின் துணை அதிபர் இந்தியாவிற்கு வருகை தந்தபோது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்கள்:
- சுற்றுலாத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரித்தல்
- சுற்றுலா தொடர்பான தகவல்கள் மற்றும் தரவுகளின் பரிமாற்றம்.
- ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட சுற்றுலாத் துறை தொடர்பானவர்களுக்கு இடையே ஒத்துழைப்பை ஊக்கப்படுத்துதல்
- சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் முதலீடுகள்
- இருவழி சுற்றுலாவை ஊக்கப்படுத்த சுற்றுலா ஏற்பாட்டாளர்கள்/பத்திரிக்கையாளர்கள்/சிந்தனையாளர்களை இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளச்செய்தல்
- ஊக்கப்படுத்துதல், சந்தைப்படுத்துதல், சுற்றுலாத் தலங்களின் மேம்பாடு மற்றும் மேலாண்மை.
- இரு நாடுகளை சிறந்த சுற்றுலா தலங்களாக மேம்படுத்தத் திரைப்பட சுற்றுலா மூலம் இருதரப்பு ஒத்துழைப்பை ஏற்படுத்துதல்
- பாதுகாப்பான, கெளரவமான மற்றும் நிலையான சுற்றுலாவை ஊக்குவித்தல்
- இரு நாடுகளுக்கும் இடையே உள்ள சுற்றுலா இயக்கத்தை மேம்படுத்துதல்
இந்தியாவின் சுற்றுலாவிற்கு ருமேனியா நாடு முக்கியமான சந்தையாகும். 2017 ஆம் ஆண்டு 11844 சுற்றுலா பயணிகள் ருமேனியாவில் இருந்து இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். இந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த புரிந்துணவு ஒப்பந்தம் வழிவகுக்கும்.
*****
(Release ID: 1549198)