மத்திய அமைச்சரவை

இந்தியாவுக்கும் மொரோக்கோவுக்கும் இடையே விமான சேவைகளுக்கான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல்

Posted On: 29 AUG 2018 1:32PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை இந்தியாவுக்கும் மொரோக்கோவுக்கும் இடையேயான திருத்தப்பட்ட விமான சேவைகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த புதிய விமான சேவைகள் ஒப்பந்தம் செயலாக்கப்படும்போது 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எட்டப்பட்ட தற்போதைய விமான சேவைகள் ஒப்பந்தம் மாற்றியமைக்கப்படும்.

 

இந்தியாவுக்கும் மொரோக்கோவுக்கும் இடையேயான விமான சேவை ஒப்பந்தம் இருநாடுகளுக்கு இடையேயான விமானப் போக்குவரத்து உறவுகளில் முக்கிய மைல் கல்லாகும். இந்த ஒப்பந்தம் வர்த்தக மேம்பாடு, முதலீடு, சுற்றுலா மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான கலாச்சார பரிமாற்றம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் திறன் கொண்டது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே தொடர்பை வலுப்படுத்தும் சூழலை உருவாக்குவதோடு, இருதரப்பைச் சேர்ந்த விமான நிறுவனங்களுக்கு வர்த்தக வாய்ப்புக்களை உருவாக்கி பாதுகாப்பை உறுதி செய்யும்.

 

விமான சேவைகளை முன்னெடுத்துச் செல்லவும், விற்பனைச் செய்யவும், இருநாடுகளைச் சேர்ந்த நிர்ணயிக்கப்பட்ட விமான நிறுவனங்கள் மற்றொரு நாட்டில் அலுவலகங்கள் அமைப்பதை இந்த ஒப்பந்தம் அனுமதிக்கிறது.

 

இரு நாடுகளைச் சேர்ந்த நிர்ணயிக்கப்பட்ட விமான நிறுவனங்கள் தடங்களுக்கான பட்டியலில் உள்ள ஆறு குறிப்பிட்ட இடங்களில் இருந்தும், இடங்களுக்கும் விமான சேவைகளை இயக்கலாம்.

 

விமானப் போக்குவரத்துறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும், இரு நாடுகளுக்கு இடையேயான விமான தொடர்பை மேம்படுத்தவும், நவீனமாக்கவும், இந்தியாவிற்கும் மொரோக்கோவுக்கும் இடையேயான விமான சேவை ஒப்பந்தம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

 

                                ****



(Release ID: 1544304) Visitor Counter : 115