மத்திய அமைச்சரவை

மரபணு தொழில்நுட்ப (பயன் மற்றும் பயன்பாடு) வரன்முறை மசோதா 2018க்கு அமைச்சரவை ஒப்புதல்

மரபணு ஆய்வகங்கள் அங்கீகாரம் மற்றும் வரன்முறை கட்டாயம்

Posted On: 04 JUL 2018 2:25PM by PIB Chennai

மரபணு தொழில்நுட்ப (பயன் மற்றும் பயன்பாடுகள்) வரன்முறை மசோதா 2018க்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.

 

விவரங்கள்:

மரபணு அடிப்படையிலான தொழில்நுட்பம் (பயன் மற்றும் வரன்முறை) மசோதா 2018ன் முதன்மையான நோக்கம், மரபணு அடிப்படையிலான தடயவியல் தொழில்நுட்பங்களை நாட்டின் நீதி விநியோக முறையை ஆதரிப்பது மற்றும் வலுப்படுத்துவதாகும்.

குற்றச் செயல்களுக்கு தீர்வு காணவும், காணாமல் போன நபர்களை அடையாளம் காணவும் மரபணு அடிப்படையிலான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது உலகம் முழுவதும் பெரும் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

மரபணு ஆய்வகங்களுக்கு அங்கீகாரம் மற்றும் வரன்முறையை அளிக்க வகை செய்யும் இந்த மசோதா நாட்டில் இந்த தொழில்நுட்பம் பயன்பாடு விரிவுபடுத்தப்படுவதை உறுதி செய்வதையும் மரபணு சோதனை முடிவுகள் நம்பகமாக இருப்பதுடன் அந்த தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படாமல் குடிமக்களின் தனிப்பட்ட உரிமை பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்கிறது.

விரைவான நீதி விநியோகம்.

உயர்வான தண்டனை விகிதம்

இந்த மசோதாவில் உள்ள அம்சங்கள், காணாமல் போனவர்கள் தகவல்கள் இடையே பொருத்த குறுக்கு சோதனை செய்ய ஒருபுறம் உதவுவதுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் அடையாளம் காணப்படாத உடல்களை அடையாளம் காண மறுபுறம் உதவுவதுடன் பேரிடர்களில் பாதிக்கப்படுவோரின் அடையாளத்தை காணவும் உதவும்.

பின்னணி:

மனித உடலை பாதிப்பவையாக வகைப்படுத்தப்பட்ட குற்றங்கள் தொடர்புடைய வழக்குகளுக்கு தீர்வு காண்பதில் (கொலை, கற்பழிப்பு, ஆட்கடத்தல் அல்லது படுகாயம் போன்றவை), சொத்துகளுக்கு எதிரான குற்றங்களில் (திருட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறி) மரபணு சோதனை நிரூபிக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டுக்கான தேசிய குற்றச்செயல் ஆவண காப்பகத்தின் புள்ளியியல் தகவல்கள் அடிப்படையில் இந்த குற்ற நிகழ்வுகளின் சராசரி ஆண்டுக்கு 3 லட்சமாக உள்ளது. இவற்றில் தற்போது மிக குறைவான வழக்குகளில் மட்டும் மரபணு சோதனை தற்போது மேற்கொள்ளப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் விரிவுபடுத்தப்படும்போது, விரைவான நீதி விநியோகம் கிடைப்பதுடன் தற்போது வெறும் 30 சதவீதமாக உள்ள தண்டனை விகிதமும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

*****



(Release ID: 1537704) Visitor Counter : 274