மத்திய அமைச்சரவை

நதிகள் இணைப்புக்கான சிறப்புக்குழு நிலவரம் மற்றும் முன்னேற்ற அறிக்கை

Posted On: 06 JUN 2018 3:25PM by PIB Chennai

நதிகள் இணைப்புக்கான சிறப்புக்குழுவின் 1.7.2016 முதல் 31.3.2018 வரையிலான காலத்திற்குரிய நிலவரம் மற்றும் முன்னேற்ற அறிக்கை குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிவில் ரிட் மனு 2002-ஆம் ஆண்டின் 512 தொடர்பான உச்சநீதிமன்றத்தின் 27.2.2012 தேதியிட்ட உத்தரவை செயலாக்குவது தொடர்பான நதிகள் இணைப்பு முன்னேற்ற அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. 2002-ஆம் ஆண்டு ரிட் மனு எண் 668 உடன் இணைந்து இந்த உத்தரவு நதிகள் இணைப்பு தொடர்பான சிறப்புக்குழுவை அமைக்க வேண்டும் என மத்திய அரசை கோருகிறது. நதிகள் இணைப்புக்கான சிறப்புக்குழுவின் முன்னேற்றம் குறித்து அவ்வப்போது மத்திய அமைச்சரவையிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவு கோருகிறது.

நதிகள் இணைப்பு தொடர்பான சிறப்புக்குழுவின் நிலவர அறிக்கையின்படி 3 முன்னுரிமை இணைப்புகளில் அதாவது கென் – பெட்வா இணைப்பு, தமங்கங்கா – பிஞ்சால் இணைப்பு, பாராதாபி – நர்மதை இணைப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுகிறது. 1980-ஆம் ஆண்டு தேசிய முன்னோக்கு திட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள இமாலய மற்றும் தீபகற்ப நதிகள் இணைப்புக் குறித்தும்  அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

                           ----

 



(Release ID: 1534640) Visitor Counter : 109