மத்திய அமைச்சரவை
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறையில் இந்தியா-மொராக்கோ இடையிலான ஒத்துழைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
23 MAY 2018 3:54PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறையில் இந்தியா – மொராக்கோ ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு, பின்னேற்பு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் 2018, ஏப்ரல் 10-அன்று புதுதில்லியில் கையெழுத்தானது.
புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறையில், பரஸ்பர ஆதாயம், சமத்துவம் மற்றும் பரஸ்பர பரிமாற்றம் அடிப்படையில், இருதரப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை மேம்படுத்த, இருதரப்பிலும் அமைப்பு ரீதியான ஒத்துழைப்புகளை ஏற்படுத்தவும் இந்த ஒப்பந்தம் வகைசெய்கிறது. அத்துடன், ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை கண்காணித்து, மறுஆய்வு செய்வதுடன் அதுகுறித்து விவாதிப்பதற்கான கூட்டு நடவடிக்கைக் குழு ஒன்றை ஏற்படுத்தவும் இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், நிபுணத்துவம் மற்றும் தகவல் சங்கிலித் தொடர்புகளை பரிமாறிக் கொள்ளும் நோக்கிலும் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, இருநாடுகளிடையேயான இருதரப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்தவும் இந்த ஒப்பந்தம் உதவும்.
------
(रिलीज़ आईडी: 1533251)
आगंतुक पटल : 162