மத்திய அமைச்சரவை

சுரங்கம் மற்றும் நிலவியல் துறையில் இந்தியா மற்றும் மொரோக்கோ இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 16 MAY 2018 3:42PM by PIB Chennai

சுரங்கம் மற்றும் நிலவியல் துறையில் இந்தியா மற்றும் மொரோக்கோ இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பின்னேற்பு ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்பந்தம் 11.04.2018 அன்று புதுதில்லியில் மொரோக்கோ மின்சாரம், சுரங்கங்கள், நிலையான மேம்பாடு அமைச்சகத்திற்கும், இந்திய சுரங்கத்துறை அமைச்சகத்துக்கும் இடையே கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம் நிலவியல் மற்றும் சுரங்கத்துறையில் இந்தியாவுக்கும் மொரோக்கோவுக்கும் இடையே நிறுவன அமைப்புகளை உருவாக்க வகை செய்கிறது. இந்த ஒத்துழைப்பினால் பொருளாதார , சமூக, சுற்றுச்சூழல் துறைகளில் இருநாடுகளுக்கும் பரஸ்பர நன்மைகள் ஏற்படும்.

நிலவியல் மற்றும் சுரங்கத்துறையில் இந்தியாவுக்கும் மொரோக்கோவுக்கும் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். நிலவியல் அடிப்படை வசதி மேம்பாடு, நிலவியல் மற்றும் சுரங்கப் பணி மேம்பாடு, பயிற்சித் திட்டங்கள், நிலவியல் தகவல் வங்கி உருவாக்குதல் போன்ற துறைகளிலான இருதரப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள், புதுமைப்படைப்பு நோக்கத்துக்கு உதவும்.
 

------


(Release ID: 1532490)