மத்திய அமைச்சரவை

இந்திய சுரங்க அமைப்பை மறுசீரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல். இணை செயலருக்கு மேல் உள்ள பதவியிடங்களை உருவாக்க மேம்படுத்த நீக்கவும் முடிவு

Posted On: 02 MAY 2018 3:36PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் இந்தியச் சுரங்க அமைப்பை மறுசீரமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி இணைச் செயலர் மற்றும் அதற்கு மேல் உள்ள சில பதவிகள் மேம்பாடு, உருவாக்கம் மற்றும் நீக்கம் செய்யப்படும். இந்திய சுரங்க அமைப்பில் தற்போது பணியாளர்களின் எண்ணிக்கை 1477 ஆக உள்ளது.

இந்திய சுரங்க அமைப்பு மறுசீரமைக்கப்படுவது அதன் சீர்திருத்தம் செய்யவும் தாதுக்கள் துறையின் வரன்முறைகளில் மாற்றம் ஏற்படுத்தும் அதன் செயல்பாடுகளை சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்த உதவும். இது தாதுக்கள் வரன்முறை மற்றும் மேம்பாட்டில் சிறப்பான செயல்பாடுகளை மேம்படுத்த இந்திய சுரங்க அமைப்பு தகவல் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தை கடைப்பிடிக்கச் செய்யும். மேலும் இந்தப் பதவிகள் முடிவுகள் எடுப்பதையும் நிறுவனத்தின் செயல்பாடுகளில் நம்பகத்தன்மையையும் இன்றியமையாததாக்கும்.

தாக்கம்:

 

இதனால் தொழில்நுட்பப் பணியாளர்கள், தாதுக்கள் துறையில் உயர் பொறுப்புகளில் நேரடியான வேலைவாய்ப்பினைப் பெறுவர். அவர்களின் பங்களிப்பால் விரைவான வளர்ச்சி ஏற்பட்டு, அதன்மூலம் அத்துறையில் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்திய சுரங்க அமைப்பின் மேம்படுத்தப்பட்ட மற்றும் விரிவுபடுத்தப்பட்ட செயல்திறன் சுரங்கத் துறைக்கு பயன் அளிக்கும். 

 

விவரங்கள்:

இணைச் செயலர் மட்டத்திலான பணியிடங்கள் மேம்பாடு, உருவாக்கம் மற்றும் நீக்கம் கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கியதாகும்:

அ. 13வது மட்டத்தில் முதன்மைச் சுரங்க கட்டுப்பாட்டாளர் 1 பதவியும் 14வது மட்டத்தில் சுரங்க கட்டுப்பாட்டாளர் 3 பதவிகளும் உருவாக்கம்.

ஆ.1 தலைமை கட்டுப்பாட்டாளர் பதவி 15வது மட்டத்தில் இருந்து 16வது மட்டத்திற்கும், தலைமைச் சுரங்க கட்டுப்பாட்டாளர் மற்றும் இயக்குனர் என 2 பதவிகள் 14வது மட்டத்தில் இருந்து 15வது மட்டத்திற்கும், 5 சுரங்க கட்டுப்பாட்டாளர், தலைமை தாது பொருளாதார வல்லுநர், தலைமை எஃகு அலங்கார இயக்குனர் மற்றும் தலைமை சுரங்க நிலவியலாளர் என 8 பதவிகள் 13ஏ மட்டத்தில் இருந்து 14வது மட்டத்திற்கு என மொத்தம் 11 பதவிகள் தரமுயர்த்தப்படும், மற்றும்

இ. 14வது மட்டத்தில் உள்ள இந்தியப் புள்ளியியல் சேவை அதிகாரி பதவி வகிக்கும்  துணைத் தலைமை இயக்குனர் (புள்ளியியல்)  பதவி நீக்கப்படும்.

பின்னணி:

இந்திய சுரங்க அமைப்பு கடந்த 1948 மார்ச் 1ம் தேதி இந்திய அரசால் பணிகள், சுரங்கம் மற்றும் மின்சார அமைச்சகத்தின் கீழ் கொள்கைகள் மற்றும் சட்டக் கட்டமைப்புகளை உருவாக்க உதவும் வகையில் ஆலோசனை அமைப்பாக உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு மத்திய மாநில அரசுகளுக்கு தாதுக்கள் ஆதாரங்களை உருவாக்கவும் பயன்படுத்தவும் ஆலோசனைகளை வழங்கியது. இந்த துறையின் மாறிய தேவைகளுக்கு ஏற்ப இந்திய சுரங்க அமைப்பின் பங்கு மற்றும் பொறுப்பு சுரங்கத் துறையின் (நிலக்கரி, பெட்ரோலியம் மற்றும் அணு தாதுக்கள் தவிர) வசதி தரும் அமைப்பாகவும் வரன்முறையாளராகவும் மாறியது.

 

தேசிய தாதுக்கள் கொள்கை 2008ன்படி, இந்திய சுரங்க அமைப்பின் பங்களிப்பு மற்றும் செயல்பாடுகளை ஆயுவு செய்து மறு சீரமைக்க குழு ஒன்றை மத்திய சுரங்க அமைச்சகம் அமைத்தது. இந்தக் குழு தந்து அறிக்கையை 04.5.2012 அன்று சமர்ப்பிக்க அது அமைச்சகத்தால் ஏற்கப்பட்டது.

 

தாதுக்கள் துறையின் வசதி மற்றும் வரன்முறைக்காக இந்திய சுரங்க அமைப்பு மூலம் சுரங்க அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

 

  1. நீடித்த வளர்ச்சிக் கட்டமைப்பு நடைமுறை மற்றும் சுரங்கத் துறையில் அறிவியல், சுற்றுச்சூழல் மற்றும் சமூக அம்சங்கள் தொடர்பாக சுரங்கங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்காக நட்சத்திர தரவரிசை.
  2.  செயற்கைக்கோள் புகைப்படங்களின் மூலம் பெரும் தாதுக்கள் எடுக்க உரிமம் அளிக்கப்பட்ட பகுதியை சுற்றி 500 மீட்டர் சுற்றுவட்டாரத்தில் சட்டவிரோதமான சுரங்கப் பணிகள் நடைபெறவில்லை என்பதை கண்காணிக்க பாஸ்கராச்சாரியா விண்வெளி பயன்பாடு மற்றும் நிலவியல் தகவல் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து சுரங்க கண்காணிப்பு முறை உருவாக்கம் மற்றும்
  3. ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு குறைந்த தரத்தில் உள்ள எஃகுவை மேம்படுத்துவதற்கான நடைமுறை உருவாக்கப்பட்டது.
  4. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சுரங்கமுறை அமைத்து தாதுக்கள் துறையில் கணினிமயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

 

கொள்கைகள் மற்றும் சட்டங்களில் மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அதற்கு அளிக்கப்பட்ட பொறுப்புக்களை எடுத்துக் கொள்ள இந்திய சுரங்க அமைப்பின் மறுசீரமைப்பு அவசியமானதாகும். இந்திய சுரங்க அமைப்பின் திருத்தியமைக்கப்பட்ட செயல்பாடுகள், புதிய செயல்பாடுகள் மற்றும் முயற்சிகளுக்கும் இது சீரமைப்பு அவசியம். தாதுக்கள் ஒதுக்கீட்டில் கூடுதல் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்த மாநிலங்களுக்கு இந்தியச் சுரங்க அமைப்பு கைகோர்த்து உதவி புரிகிறது. சுரங்க வட்டங்கள் ஏலத் தயாரிப்பு, சராசரி விற்பனை விலை வெளியீடு, ஏலத்திற்கு பிந்தைய கண்காணிப்பு மற்றும் ஒப்புதல் நடைமுறைகளிலும் மாநில்ங்களுக்கு இந்திய சுரங்க அமைப்பு உதவுகிறது.

 

இந்திய சுரங்க அமைப்புக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளை அது நிறைவேற்றும் வகையில் அதன் அலுவலகம் ஏற்கனவே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ராய்ப்பூர் மற்றும் காந்திநகரில் புதிய மண்டல அலுவலகங்கள் திறக்கப்பட்டு, சார் மண்டல அலுவலகம் கவுஹாத்தியில் மண்டல அலுவலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. கொல்கத்தா மற்றும் உதய்ப்பூரில் உள்ள மண்டல அலுவலகங்கள் கோட்ட அலுவலகங்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளன. திறன் மேம்பாட்டிற்காக நீடித்த வளர்ச்சிக்கான மேம்பாட்டு கட்டமைப்புப் பயிற்சி நிறுவனம் உதய்பூரிலும், ஐதராபாத்தில் ரிமோட் சென்சிங் செண்டர் மற்றும், கொல்கத்தாவில் நீடித்த சுரங்கப் பணிக்கான தேசிய அளவிலான பயிற்சி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. வாரணாசியில் திறன் மேம்பாட்டு மையம் விரைவில் திறக்கப்பட உள்ளது.

*****



(Release ID: 1531040) Visitor Counter : 151