• Skip to Content
  • Sitemap
  • Advance Search
மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

ஐதராபாத் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பல்கலைக்கழகத்தில் தூய்மை உறவினர் பாதுகாப்பு முகாமை மத்திய அமைச்சர் டாக்டர் சுகந்த மஜும்தார் தொடங்கி வைத்தார்

Posted On: 28 SEP 2024 3:17PM by PIB Chennai

தெலங்கானா மாநிலம் ஐதராபாதில் உள்ள ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பல்கலைக்கழகத்தில் 'தூய்மை உறவினர் பாதுகாப்பு முகாமை ' மத்திய கல்வி மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர் சுகந்த மஜும்தார் இன்று தொடங்கி வைத்தார். தூய்மையே சேவை 2024 இயக்கத்தின் ஒரு பகுதியாக துப்புரவுப் பணியாளர்களுக்குபாதுகாப்புக் கருவிப் பெட்டிகளை அவர் வழங்கினார். தூய்மையே சேவை இயக்கம் 2024 முயற்சிகளுக்காக நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். துணைவேந்தர் (பொறுப்பு), பேராசிரியர் ஹரிபந்தி லட்சுமி, டீன், கல்வியாளர்கள், பிரமுகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில்   இயக்கத்தின்  நடவடிக்கைகள் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன், ஒரு குறும்படமும் திரையிடப்பட்டது.

முன்னதாக, தேசிய கல்விக் கொள்கை 2020- அமல்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு  டாக்டர் மஜும்தார்  தலைமை தாங்கினார், மாணவர்களுக்காக பல்கலைக்கழகத்தில் ஒரு புதிய வாசிப்பு அறையையும்  திறந்து வைத்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் மஜும்தார், 60 ஆண்டுகள் பழமையான இந்த நிறுவனம் 11 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கு ஒருங்கிணைப்புப் பல்கலைக்கழகமாக இருப்பது குறித்தும் தேசிய கல்விக் கொள்கை 2020- செயல்படுத்துவதற்கான வரைபடத்தைத்  தயாரிப்பதில் பணியாற்றியுள்ளது குறித்தும்  மகிழ்ச்சி தெரிவித்தார். வெளியுறவு அமைச்சகத்தின் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் (.டி..சி) கீழ், சர்வதேச பயிற்சித் திட்டங்கள் மூலம் வெளிநாட்டுப் பங்கேற்பாளர்களுக்கு பயிற்சித் திட்டங்களை வழங்குவதில் பல்கலைக்கழகத்தின் பங்களிப்பை அவர் பாராட்டினார். 120 க்கும் அதிகமான  நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பங்கேற்பாளர்களுக்கு பல்கலைக்கழகத்தில் இதுவரை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

ஸ்வச்சதா ஹே சேவா 2024 பிரச்சாரத்தின் கீழ் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை நடத்துவதன் மூலம் தூய்மை  செய்தியைப் பரப்புவதில் பல்கலைக்கழகத்தின் முயற்சிகளை டாக்டர் மஜும்தார் பாராட்டினார்இந்த நிகழ்வுகளில் பெரும் எண்ணிக்கையில் உணர்வுபூர்வமாகப் பங்கேற்ற பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை அவர் பாராட்டினார். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் வார்த்தைகளை மீண்டும் நினைவுபடுத்திய அவர், தூய்மையை தங்களது வாழ்க்கையின்  பகுதியாக ஒவ்வொருவரும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று ' இயக்கத்தில்  பங்கேற்ற டாக்டர் மஜும்தார் வளாகத்தில் ஒரு மரக்கன்றையும்  நட்டார்.

*****

SMB/KV

 

 



(Release ID: 2059852) Visitor Counter : 9


Link mygov.in