இடுகை இடப்பட்ட நாள்:
26 NOV 2026 4:10PM by PIB Chennai
அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளிலும் இந்திய அரசியலமைப்பின் புதுப்பிக்கப்பட்ட பதிப்புகளை குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.
இதனை இந்திய ஜனநாயகப் பயணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை எனக் குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மொழிகளிலும் அரசியலமைப்பு கிடைப்பது இந்தியாவின் மொழிப் பன்முகத்தன்மையையும், ஜனநாயகத்தையும் கொண்டாடும் விதமாக அமைந்துள்ளது என்றார். மக்கள் அவரவர் தாய்மொழியில் அரசியலமைப்பை அனுகுவதற்கான வசதி கிடைத்திருப்பது, அரசியலமைப்பு உரிமைகள், கடமைகள், மாண்புகளை நன்கு புரிந்துகொள்ள உதவும் என அவர் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் வரைவுக் குழுத் தலைவர் டாக்டர் பி ஆர் அம்பேத்கர், அரசியலமைப்பு நிர்ணய சபையின் பிற உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்திய திரு சி பி ராதாகிருஷ்ணன், அரசியலமைப்பு வெறும் சட்டக் கட்டமைப்பு மட்டுமல்ல, அது தேசத்தின் உயிரோட்டம் என்று கூறினார். அரசியலமைப்பை மக்களிடம் கொண்டு சேர்க்கும் மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் அவரது குழுவினரின் முயற்சிகளை அவர் பாராட்டினார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் ஞான பாரதம், காசி தமிழ் சங்கமம் போன்ற முன்முயற்சிகள் இந்தியாவின் நாகரிகப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் அரசின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வரிகளை நினைவுகூர்ந்த குடியரசு துணைத்தலைவர், இந்தியாவில் பல மொழிகள் பேசப்பட்டாலும், தேச சேவையில் அதன் சிந்தனைகளும், லட்சியங்களும் ஒன்றிணைந்துள்ளன என்றார். 22 மொழிகளிலும் அரசியலமைப்பு வெளியிடப்பட்டிருப்பது, ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வை வெளிப்படுத்துவதுடன், 2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய பயணத்தை வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341937®=3&lang=1&_gl=1
***
SS/PD/SH