57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் சகோதரத்துவம், பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த “பாய் பந்த்” படம் திரையிடல்

இடுகை இடப்பட்ட நாள்: 25 NOV 2026 3:17PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2341490Views: 6

கோவாவில் நடைபெறும் 57-வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில், மணீஷ் சைனி இயக்கிய குஜராத்தி திரைப்படமான “பாய் பந்த்” படம் திரையிடப்பட்டது. கிராமத்தில் பாரம்பரிய திருமண இசைக்குழுவை நடத்தும் சகோதரர்களின் வாழ்க்கை சம்பவங்களை “பாய் பந்த்” படம் விவரிக்கிறது. பாரம்பரிய திருமண இசைக்குழு சந்திக்கும் சவால்கள், பிரிவு, சகோதரத்துவம், கலாச்சாரம், குடும்ப உறவுகள், வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தால் இசைக்குழுவில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இப்படத்தில் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச இந்திய திரைப்பட விழாவில், “பாய் பந்த்” திரைப்பட குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது. அப்போது பேசிய “பாய் பந்த்” படத்தின் இயக்குநர் மணீஷ் சைனி, இப்படம் குஜராத்தி மொழி, கலாச்சாரத்தை பின்பற்றி எடுக்கப்பட்டிருந்தாலும், இந்த கதையுடன் அனைவரும் தங்களை தொடர்புபடுத்திக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார். பிரந்திய மொழிப் படங்களில் வேரூன்றிய கலை, கலாச்சாரம், கதையமைப்பு ஆகியவை அதிக பார்வையாளர்களை சென்றடைய இந்த திரைப்படம் வழிவகுக்கும் என்றும் கூறினார்.

நடிகர் பிரிட் கமானி கூறுகையில், “பாய் பந்த்” திரைப்படம் வண்ணங்களும், உற்சாகமும் நிறைந்த தனித்துவமான படம் என பாராட்டினர். தனது முதல் குஜராத்தி மொழி படமான இதில், இயக்குநர் மணீஷ் சைனியுடன் பணியாற்றிய அனுபவம் சிறப்பாக இருந்தாகக் குறிப்பிட்டார். படப்பிடிப்பின்போது தான் அனுபவித்த படைப்பு சுதந்திரத்தை வெகுவாக பாராட்டினார். கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பேனா என்ற சோதனைக்கு பின்னரே தன்னை தேர்ந்தெடுக்குமாறு இயக்குநரிடம் கேட்டுக்கொண்டதை பிரட் காமனி நினைவுகூர்ந்தார்.

நடிகர் சிராக் கத்ரேச்சா கூறுகையில், தனது கதாபாத்திரத்திற்கான நம்பகத்தன்மையை கொண்டுவர, கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டதாக கூறினார். பாடகராக நடிப்பதில் சவால்களை எதிர்கொண்டதாக குறிப்பிட்ட அவர், அதை முழு ஈடுபாடுடன் செய்ததாகவும் கூறினார்.                         

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341168&reg=3&lang=1&_gl=1*

 

***

SS/LN/SH 


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2341490
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026