கோவாவில் நடைபெற்று வரும் 57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவின் ‘இந்தியன் பனோரமா’ பிரிவில் திரையிடப்பட்ட ‘ஆதி அனந்த்’ மராத்தித் திரைப்படம் குறித்த படைப்புப் பயணத்தை இயக்குநர் மகேஷ் லிமாயே பகிர்ந்து கொண்டார். பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசினார்.
137 நிமிடங்கள் கொண்ட இப்படம், வளர்ந்து வரும் இளம் நடிகர் ஆதித்யா மற்றும் அவரது துடிப்பான தாத்தா அனந்த் ராவ் (பத்மஸ்ரீ விருது பெற்ற மூத்த நடிகர் அசோக் சரஃப்) இடையிலான உறவைப் பேசுகிறது. விபத்துக்குப் பிறகு அனந்த் ராவ் படுக்கையில் வீழும்போது, நடிப்புத் துறைக் கனவுகளுக்கும் பராமரிப்புப் பொறுப்புகளுக்கும் இடையே ஆதித்யா எதிர்கொள்ளும் சவால்களை இப்படம் விவரிக்கிறது.
ராகுல் தேஷ்பாண்டே பாடியுள்ள பஜனைப் பாடல் மற்றும் அசோக் சரஃபின் தபேலா வாசிப்பு குறித்து மகேஷ் லிமாயே பாராட்டினார். ‘ஆதி’ (தொடக்கம்) மற்றும் ‘அனந்த்’ (காலத்தால் அழியாதது) என்ற தலைப்பு, தலைமுறை கடந்த உறவுகளைக் குறிப்பதாக அவர் கூறினார்.
இச்செய்தியாளர் சந்திப்பை ஷிவ்ராஜ் கங்வால் நெறிப்படுத்தினார்.
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340795®=3&lang=1
****
SK/NB/SH