கோவாவில் நடைபெற்று வரும் 57-வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில், பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் “நிர்மாஞ்சலி: மசிஜ் நோவிக்கியின் சண்டிகர்” என்ற ஆவணப்படம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த ஆவணப்படத்தின் இயக்குனர் சூரஜ் குமார் கூறுகையில், இப்படம் கட்டிடக் கலைஞர் மசிஜ் நொவிக்கியின் அதிகம் அறியப்படாத பாரம்பரியம் வெளியுலகுக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார். இந்த ஆவணப்படம் சண்டிகரின் தனித்துவமான ஜாலி முகப்புகள், சுற்றுப்புற சந்தைகள், கட்டிடக்கலை ஆகியவற்றிற்கு நொவிக்கி ஆற்றிய பங்களிப்பை எடுத்துரைத்ததாக குறிப்பிட்டார். சண்டிகர் கட்டிடக்கலை அருங்காட்சியகத்தில் நொவிக்கியின் சுமார் 25 படைப்புகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். பிரம்மாண்டமான கட்டமைப்புகளை திணிப்பதற்கு பதிலாக, நொக்கியின் வடிவமைப்புகள், இந்தியாவின் காலநிலை, வாழ்க்கை சூழலுக்கு ஏற்றவாறு இருந்ததாகவும் சூரஜ் குமார் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2340376®=3&lang=1
****
SK/LN/SH