57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

இந்தியா – ஸ்பெயின் இடையே திரைப்படத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த புதிய முயற்சி

இடுகை இடப்பட்ட நாள்: 21 NOV 2026 9:22PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2339930Views: 15

இந்தியா, ஸ்பெயின் நாடுகளுக்கு இடையே ஊடகம், பொழுதுபோக்குத் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெற்றது. குறிப்பாக, இரு நாடுகளுக்கு இடையிலான திரைப்படக் கூட்டுத் தயாரிப்பு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது, உலக ஒலிபரப்பு, ஒலிக்காட்சி, பொழுதுபோக்கு உச்சி மாநாடு (WAVES) வாயிலாக இணைந்து செயல்படுவது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

கோவாவில் நடைபெற்று வரும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI 2026), கௌரவ நாடாக ஸ்பெயின் பங்கேற்கிறது. இதையொட்டி, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணைச் செயலர் திரு பிரிதுல் குமார் தலைமையிலான இந்தியக் குழுவினர், ஸ்பெயின் கலாசார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திரைப்பட, ஒலிக்காட்சிக் கலை நிறுவனத்தின் தலைமை இயக்குநர் திருமதி மார்டா செரானோ தலைமையிலான குழுவினரைச் சந்தித்துப் பேசினர்.

2012-ல் கையெழுத்தான திரைப்படக் கூட்டுத் தயாரிப்பு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது. இதன் மூலம் புனைகதைத் திரைப்படங்கள், அனிமேஷன் படங்கள், ஆவணப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியவற்றின் கூட்டுத் தயாரிப்புக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.

நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறும் திரைப்பட விழா, ஸ்பெயின் திரைப்படங்களை இந்திய ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துவதுடன், இரு நாடுகளின் திரைப்படத் துறையினரிடையே தொடர்புகளை வலுப்படுத்தும்.

மேலும், நவம்பர் 20 முதல் 24 வரை பனாஜியில் நடைபெறும் 20-வது வேவ்ஸ் திரைப்படச் சந்தையும் இரு நாடுகளின் திரைப்படத் துறையினருக்குப் பயனுள்ள தளமாக அமையும்.

இந்த முயற்சிகள் திரைப்படக் கூட்டுத் தயாரிப்பு, படைப்பாற்றல் ஒத்துழைப்பு, தொழில்முறை பரிமாற்றம் ஆகியவற்றை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2339764&reg=48&lang=2

*******

SK/PLM/RJ


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2339930
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026