கோவாவில் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கியுள்ள நிலையில், விழா இயக்குநரும் பிரபல திரைப்பட இயக்குநருமான திரு அசுதோஷ் கோவாரிகர், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தினசரி செய்திமடலான இஃபிலாய்ட்-ன் ஐந்தாவது தொகுதியின், முதல் இதழை வெளியிட்டார்.
திரைப்பட விழாவில் இடம்பெறும் திரைப்படங்களின் சிறப்புகள், இயக்குநர்களின் கருத்துப் பகிர்வுகள், திரைக்குப் பின் உள்ள பணிகள் ஆகியவற்றை இந்தச் செய்திமடல் வாசகர்களுக்குக் கொண்டுசெல்லும்.
திரைப்பட விழாவின் முக்கிய நிகழ்வுகள், சிறப்புக் கட்டுரைகள், புகைப்படங்கள், நிகழ்ச்சி நிரல்கள், முக்கிய அறிவிப்புகள் ஆகியவை இதில் இடம்பெறும். திரைப்படத் திரையிடல்கள், இயக்குநர்களுடனான கலந்துரையாடல்கள் உள்ளிட்ட விழாவின் பல்வேறு நிகழ்வுகளும் இதில் தொகுத்து வழங்கப்படும்.
‘எல்லைகளைக் கடந்த கதைகள்’ என்பதே இந்த ஆண்டுத் திரைப்பட விழாவின் கருப்பொருளாகும். திரைப்படங்கள் மூலம் மக்கள், கலாசாரங்கள், மாறுபட்ட சிந்தனைகள் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் நோக்கத்தை இந்தச் செய்திமடல் எடுத்துரைக்கிறது.
நவம்பர் 20 முதல் 29-ஆம் தேதி வரை, திரைப்பட விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் இஃபிலாய்ட் வெளியிடப்படும். பத்திரகை தகவல் அலுவலகம் வெளியிடும் அதிகாரப்பூர்வ செய்திகளுடன் கூடுதல் தகவல்களைக் கொண்டதாக இந்த செய்திமடல் வெளிவருகிறது. எளிய வடிவில் அழகிய புகைப்படங்களுடனும் விழா நிகழ்வுகளை இது வழங்கும்.
முதல் இதழை இந்த இணையதள இணைப்பில் படிக்கலாம்: https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1®=48
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338918®=3&lang=1
***
SS/PLM/SH