சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2026 4:12PM by PIB Chennai
மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் விதிமுறை 115-ன் உட்பிரிவு (7)-ல் திருத்தத்தை முன்மொழிந்துள்ளது. வாகனங்கள் இயக்கப்பட்ட காலத்திற்கு ஏற்ப உமிழ்வுசோதனை கால இடைவெளியை சீரமைப்பது அதன் நோக்கமாகும். இது புதிய, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனங்களை வைத்திருப்போர் மீதான சுமையை குறைப்பதையும், அதே நேரத்தில் பயன்பாட்டில் உள்ள வாகனங்களின் உமிழ்வை தொடர்ந்து கண்காணிக்கும் வகையிலும், மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்கும் முறையை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
இத்திருத்தம் பின்வருவனவற்றை கொண்டதாகும்.
1.திருத்தப்பட்ட செல்லுபடியாகும் கால அளவுகள் பின்வருமாறு முன்மொழியப்பட்டுள்ளது.
பிஎஸ்-I, பிஎஸ்-II, பிஎஸ்-III வாகனங்கள்: 3 மாதங்கள்
பிஎஸ்-IV வாகனங்கள்: 6 மாதங்கள்
பிஎஸ்-VI போக்குவரத்து அல்லாத வாகனங்கள்:
பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து 6 ஆண்டுகள் வரை – 3 ஆண்டுகள்;
6 ஆண்டுகளுக்கு மேல், ஆனால் 10 ஆண்டுகளுக்கு மிகாமல்- 1 ஆண்டு
10 ஆண்டுகளுக்கு மேல்- 6 மாதங்கள்
பிஎஸ்-VI போக்குவரத்து வாகனங்கள்:
புதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து 6 ஆண்டுகள் வரை - 2 ஆண்டுகள்
6 ஆண்டுகளுக்கு மேல், ஆனால் 10 ஆண்டுகளுக்கு மிகாமல் – 1 ஆண்டு
10 ஆண்டுகளுக்கு மேல் – 6 மாதங்கள்
இந்த திருத்தம் நடைமுறைக்கு வரும் முன்பு வழங்கப்பட்ட மாசுக்கட்டுபாட்டு சான்றிதழ்களுக்கு திருத்தம் அமலுக்கு வந்த பிறகு மேற்கொள்ளப்படும் முதலாவது புதுப்பித்தல் தேதியிலிருந்தே புதிய செல்லுபடியாகும் கால அளவுகள் பொருந்தும்.
தற்போதைய சான்றிதழ் காலாவதியாவதற்கு முந்தைய 10 நாட்களுக்குள் மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் புதுப்பிக்கப்பட்டால் அந்த புதிய சான்றிதழ் பழைய சான்றிதழ் காலாவதியான தேதியிலிருந்தே நடைமுறைக்கு வரும் எனினும், பழைய சான்றிதழ் காலாவதியான பிறகு புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட்டால் புதிய சான்றிதழ் புதுப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338468®=3&lang=1
***
SS/IR/PS/SH