மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

தக்ஷின் 2026 நிகழ்ச்சியில் குரல் வழி செயற்கை நுண்ணறிவு, பன்மொழித் திறன்களை காட்சிப்படுத்திய பாஷிணி

இடுகை இடப்பட்ட நாள்: 19 NOV 2026 11:38AM by PIB Chennai

மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டிஜிட்டல் இந்தியா பாஷிணி பிரிவு, புதுதில்லியில் உள்ள இந்தியா ஹேபிடேட் மையத்தில் நவம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தக்ஷின் 2026 உயர்மட்ட அளவிலான கொள்கை உரையாடலில் பங்கேற்றது. மத்திய வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி, தகவல் அமைப்பு (ஆர்ஐஎஸ்) இந்நிகழ்ச்சியை நடத்தியது.

இங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கில் பன்மொழிகளில் மொழிபெயர்ப்பு, பேச்சு அங்கீகாரம், குரல் வழி செயல்பாடுகள் உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. நிர்வாகம், கல்வி, சுகாதாரம், வங்கி, சட்ட சேவைகள் ஆகிய துறைகளில் மக்களின் விருப்ப மொழிகளில் டிஜிட்டல் சேவைகளை எளிதாக வழங்குவது குறித்து நேரடி செயல்விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

மத்திய வெளியுறவு இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் பாஷிணி அரங்கிற்கு நேரில் வருகை தந்து, அதன் பன்மொழி செயற்கை நுண்ணறிவுத் திறன்களைப் பார்வையிட்டுப் பாராட்டினார். 36 இந்திய எழுத்து மொழிகள், 23 இந்திய குரல் மொழிகள், 35 சர்வதேச மொழிகளை ஆதரிக்கும் பாஷிணி, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் முக்கிய அங்கமாகச் செயல்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338281&reg=48&lang=2

***

SS/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2338646) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Nepali , हिन्दी , Marathi , Bengali-TR , Kannada , Malayalam