இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2026 3:10PM by PIB Chennai
ஆசியாவின் மிகப்பெரிய விமானக் கண்காட்சி, 2027 பிப்ரவரி மாதம் 8-ம் தொடங்கி 12-ம் தேதி வரை, கர்நாடக மாநிலம், யெலஹங்காவில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விருப்பம் உள்ள ஊடகவியலாளர்கள் https://aeroindia.gov.in/. என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். 2027 ஜனவரி 4-ம் தேதி அன்று முன்பதிவு முடிவடைகிறது.
அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள், பத்திரிகை தகவல் அலுவலகம் (பிஐபி) அல்லது மாநில அரசு வழங்கிய அங்கீகார அட்டை வைத்திருப்பவர்கள், செல்லுபடியாகும் ஊடக அடையாள அட்டை வைத்திருக்கும் அங்கீகாரம் பெறாத ஊடகவிலாளர்கள் ஆகியோர் பதிவு செய்யலாம். அரசு வழங்கிய புகைப்பட அடையாள அட்டை உள்ள அனைத்து ஊடகவியலாளர்கள் இக்கண்காட்சியில் பங்கேற்க தகுதியானவர்கள். வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் செல்லுபடியாகும் ‘ஜே’ விசா வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் நடத்தப்படும் ஏரோ இந்தியா-2027 கண்காட்சியானது, முன்னணி விண்வெளி, பாதுகாப்பு நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழிற்நிறுவனங்களின் பிரதிநிதிகள், பாதுகாப்பு துறையை சேர்ந்தவர்களை ஒன்றிணைக்கும் தளமாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில், வர்த்தகம், தொழிற்நிறுவனங்களுக்கு இடையேயான கலந்துரையாடல், தொழில்நுட்பம் குறித்த செயல்முறை விளக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.
சர்வதேச அளவில் விண்வெளி, பாதுகாப்பு துறையில் நம்பகமான கூட்டாளியாக இந்தியா விளங்கும் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இந்த கண்காட்சி அமையவுள்ளது. இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள், சிறுகுறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையிலும், முதலீடு, ஏற்றுமதி, தொழிநுட்ப ஒத்துழைப்பு அம்சங்களுக்கு அடித்தளமாகவும் இந்த விண்வெளி கண்காட்சி அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338413®=3&lang=1&_gl=1
***
TV/LN/RJ