கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில், இமயமலைப் பிராந்தியத்தின் மலைகள், மடாலயங்கள், பனி மூடிய கிராமங்கள், அன்றாடக் கைவினைப் பொருட்கள் ஆகியவை உயிரோட்டமான குரலைப் பெறும். இரண்டு முழு நீளத் திரைப்படங்கள், இரண்டு பகுதி நீளத் திரைப்படங்கள் உட்பட, லடாக்கி, காஷ்மீரி மொழிகளில் உள்ள நான்கு திரைப்படங்கள், அப்பகுதியின் நிலப்பரப்புகள், பாரம்பரியங்கள், அன்றாட மனிதக் கதைகளை விழா பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கும். இந்தியன் பனோரமா பிரிவின் குறும்படமல்லாத திரைப்படங்கள் பிரிவில் தொடக்கத் திரைப்படமாகத் திரையிடப்படும் லடாக்கைச் சேர்ந்த குறும்படமான ‘பிகமிங்’, இத்திரைப்படத் தேர்வின் ஒட்டுமொத்தத் தொனியைத் தீர்மானிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337657®=3&lang=1
***
SK/BR/PS