இடுகை இடப்பட்ட நாள்:
17 NOV 2026 2:46PM by PIB Chennai
அரசு நிர்வாகத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி 25 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி, நிதி ஆயோக் சார்பில், 2026 நவம்பர் 17-ம் தேதி அன்று தேசிய அளவிலான பயிலரங்கு புதுதில்லியில் நடைபெற்றது. “தலைமைத்துவம் என்பது ஒரு பணியே” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கில், மத்திய, மாநில அரசுகளின் செயலாளர்கள், மூத்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் என 900க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
2001-ம் ஆண்டு அக்டோபரில் குஜராத் மாநில முதலமைச்சராகவும், 2014-ம் ஆண்டு மே மாதம் பிரதமராகவும் திரு நரேந்திர மோடி பதவியேற்றார். அரசு நிர்வாகத்தில் 25 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில், மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சிக்கு பிரதமர் ஆற்றிய சேவைகள், அவர் கொண்டு வந்த திட்டங்கள் குறித்து இந்த பயிலரங்கில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த பயிலரங்கில் பகிரப்பட்ட கலந்துரையாடல்கள் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், குடிமைப் பணிக்கான பயிற்சி மையங்கள் ஆகியவற்றுக்கு பயனுள்ளதாக அமைந்தது.
பயிலரங்கில் உரையாற்றிய பிரதமரின் முதன்மைச் செயலாளர் திரு பி.கே.,மிஸ்ரா, இந்தியாவின் நிர்வாகப் பயணமானது வலிமையான தலைமை, தொலைநோக்கு பார்வையை திட்டங்களாக செயல்படுத்துதல் ஆகியவை மூலம் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது என தெரிவித்தார். 2001-ம் ஆண்டில் கட்ச் பகுதியில் ஏற்பட்ட நிலடுக்கம், கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், மகளிர் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதன் மூலம் மக்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றம் கண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2337374®=3&lang=1
****
SK/LN/SH