பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் ஆசியக் கோப்பை 2026-ஐ வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 14 NOV 2026 9:30PM by PIB Chennai

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் ஆசியக் கோப்பை 2026-ஐ வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டிற்கு இது ஒரு மிகச்சிறப்பான நாள் என்று குறிப்பிட்ட அவர், இளம் கிரிக்கெட் வீரர்களின் அபாரமான செயல்பாட்டைக் கண்டு தாம் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தார்.

அணியினரின் வெற்றி பல இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று குறிப்பிட்ட பிரதமர், வீரர்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

“இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு மிகச்சிறப்பான நாள்!

இன்றைய அபாரமான ஆட்டத்திற்காகவும், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் ஆசியக் கோப்பை 2026-ஐ வென்றதற்காகவும் நமது இளம் கிரிக்கெட் வீரர்களை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். இவர்களின் வெற்றி பல இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும்.

அணியின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்."

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336340&reg=3&lang=1

***

AD/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2336872) வருகையாளர் எண்ணிக்கை : 13