பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்கான பிரதமரின் பயணம்

இடுகை இடப்பட்ட நாள்: 12 NOV 2026 11:41PM by PIB Chennai

பிலிப்பைன்ஸ் அதிபர் மேதகு திரு பெர்டினாண்ட் ஆர். மார்கோஸ் ஜூனியர் அவர்களின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 நவம்பர் 16 முதல் 17 வரை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

இந்தப் பயணத்தின்போது, ​​2026-ம் ஆண்டிற்கான ஆசியான் அமைப்பின் தலைமை நாடாகச் செயல்படும் பிலிப்பைன்ஸ் ஏற்பாடு செய்யும் 23-வது ஆசியான்-இந்திய உச்சிமாநாட்டிலும், 21-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டிலும் பிரதமர் பங்கேற்பார். இந்த உச்சிமாநாடுகள் 2026 நவம்பர் 17 அன்று நடைபெறவுள்ளன.

இந்திய-ஆசியான் உறவுகள், இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கை, இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான நமது தொலைநோக்குப் பார்வையின் ஒரு மையத் தூணாகும். இந்தியாவும் ஆசியான் அமைப்பும் 2026-ம் ஆண்டை ஆசியான்-இந்திய கடல்சார் ஒத்துழைப்பு ஆண்டாகக் கொண்டாடும் வேளையிலும், 2027-ம் ஆண்டில் இரு தரப்பு உறவுகளின் 35 ஆண்டுகளையும், விரிவான உத்திசார் கூட்டாண்மையின் ஐந்தாண்டுகளையும் நினைவுகூரும் வகையிலும் இந்தப் பயணம் அமைந்துள்ளது.

ஆசியான்-இந்திய உச்சிமாநாடு, 'ஆசியான்-இந்திய செயல் திட்டம் 2026–2030' உள்ளிட்ட விரிவான உத்திசார் கூட்டாண்மையைச் செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மறுஆய்வு செய்வதுடன், எதிர்கால ஒத்துழைப்புக்கான பாதையையும் வகுக்கும்.

ஆசியான், இதில் பங்கேற்கும் இதர  நாடுகளுடன் பிராந்திய, உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து  கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள கிழக்கு ஆசிய உச்சிமாநாடு ஒரு வாய்ப்பை வழங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335665&reg=3&lang=1

***

TV/BR/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2335901) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Kannada , Malayalam