சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
12 NOV 2026 4:13PM by PIB Chennai
2020 ஆகஸ்ட் 15 அன்று சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட போதைப் பொருள் இல்லா இந்தியா இயக்கம், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான ஒரு நாடு தழுவிய மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது. 2026 நவம்பர் 12 நிலவரப்படி, இந்த இயக்கம் நாடு முழுவதும் 35.88 கோடிக்கும் அதிகமான மக்களைச் சென்றடைந்துள்ளது.
இந்த முன்முயற்சி சுமார் 14.35 கோடி இளைஞர்களையும், 11.33 கோடி பெண்களையும் சென்றடைந்துள்ளது. மேலும், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தன்னார்வலர்களாகப் பதிவு செய்துகொண்டுள்ளனர். இது, போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் கூட்டு முயற்சியில் சமூகத்தின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்துகிறது.
கல்வி நிறுவனங்களில் 34.07 லட்சத்திற்கும் அதிகமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாக, போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்த கலந்துரையாடல்களில் மாணவர்களும் இளைஞர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335430®=3&lang=1&_gl=1
****
TV/BR/SH