நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அரசுக் கட்டடங்களில் சூரிய மின்சக்திப் பயன்பாடு விருது: நிதிச் சேவைகள் துறைக்கு இரண்டாம் இடம்

இடுகை இடப்பட்ட நாள்: 06 NOV 2026 2:54PM by PIB Chennai

அரசுக் கட்டடங்களில் சூரிய மின்சக்தி பயன்பாட்டை சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக, மத்திய நிதிச் சேவைகள் துறைக்கு 'பிரதமரின் சூரிய வீடுகள் உயர் சிறப்பு விருது' வழங்கப்பட்டுள்ளது.

இத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 4,144 கட்டடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, சூரிய மின்சக்தி அமைக்கத் தொழில்நுட்ப ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் சாத்தியமான 2,576 கட்டடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இவை அனைத்திலும் மேற்கூரை சூரிய மின்சக்தி அமைப்புகள் நிறுவப்பட்டு, மொத்தம் 61.50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக, இந்த துறைக்கு, மத்திய அமைச்சகங்கள்/ துறைகளில், அதிக எண்ணிக்கையிலான கட்டடங்களில் சூரிய மின்சக்தி அமைத்ததில், இரண்டாம் இடத்திற்கான விருது வழங்கப்பட்டது.

2026 நவம்பர் 5-ஆம் தேதி புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாநாட்டில், குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இவ்விருதை வழங்கினார். இந்தச் சாதனையானது, நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை எட்டுவதில் இத்துறையின் பங்களிப்பை எடுத்துக்காட்டுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333550&reg=3&lang=1 

***

TV/PLM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2334278) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Bengali , Punjabi , Gujarati , Kannada , Malayalam