பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

எளிமையான, நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட வரி நிர்வாகத்திற்கான ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகளை பிரதமர் வரவேற்றுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 08 OCT 2026 9:50PM by PIB Chennai

ஜிஎஸ்டி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டுள்ள புதிய ஜிஎஸ்டி சீர்த்திருத்தங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். இந்த பரிந்துரைகள், சரக்கு, சேவை வரியை எளிமையாக்குவதற்கும், திறமையானதாகவும், குடிமக்களுக்கு ஏற்றதாகவும் மாற்றுவதற்கு ஒரு குறிப்பிடத்தக்க படியாக விளங்கும் என்றும் பிரதமர் விவரித்துள்ளார். கைது விதிகளை நீக்குதல், குற்றமற்ற தன்மையை அதிகரித்தல், நடைமுறைகளை எளிமையாக்குதல் தொடர்பான கவுன்சிலின் பரிந்துரைகளை சுட்டிக்காட்டினார். இந்த நடவடிக்கைகள் வரிசெலுத்துவோர், வணிகங்கள் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் திரு மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

ஜிஎஸ்டி கவுன்சிலால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை வரவேற்கிறேன்.

கைது விதிகளை நீக்குதல், குற்றமற்ற தன்மையை அதிகரித்தல், நடைமுறைகளை எளிமையாக்குதல் தொடர்பான கவுன்சிலின் பரிந்துரைகள் மிகவும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதன் நோக்கம்:

விரைவான முடிவுகள்.

குறைந்த இணக்க செலவுகள்.

தானியங்கி பணத் திருப்பி அளிப்பு.

நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகம்.

ஜிஎஸ்டியை மேலும் திறமையானதாகவும், வெளிப்படையானதாகவும், குடிமக்களுக்கு உகந்ததாகவும் மாற்றுவதற்கான நம்முடைய தொடர்ச்சியான முயற்சிகளுக்கு இவை இணக்கமாக உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2321077&reg=3&lang=1

***

TV/LN/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2333708) வருகையாளர் எண்ணிக்கை : 16