நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அமைச்சகங்களுக்கு இடையேயான குழு ரூ.1,100 கோடி மதிப்பிலான சொத்து பணமாக்கல் முன்மொழிவுக்கு பரிந்துரைத்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 05 NOV 2026 1:16PM by PIB Chennai

பொதுத்துறை நிறுவனங்கள் செயலாளர், தொலைத் தொடர்புத்துறை செயலாளர் ஆகியோர் தலைமையிலான அமைச்சகங்களுக்கு இடையேயான குழு ரூ.1,100 கோடிக்கும் அதிக மதிப்புடைய சொத்துக்களின்  பணமாக்கல் முன்மொழிவுகளை மாற்று வழிமுறையின் பரிசீலனைக்காகவும், ஒப்புதலுக்காகவும் பரிந்துரைத்துள்ளது.

இந்த முன்மொழிவுகள் பணமாக்குதலுக்காக அடையாளம் காணப்பட்ட மத்திய பொதுத்துறை நிறுவனங்களின்  உபரியான நிலம், கட்டிட சொத்துகள் தொடர்பானவையாகும். உபரியாகவும், முழுமையாக பயன்படுத்தப்படாமலும் உள்ள பொது சொத்துக்களை மதிப்படையச் செய்யவும் அவற்றின் ஆக்கபூர்வமான பயன்பாட்டிற்காகவும் மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளில் இந்த பரிந்துரைகள் ஒரு முக்கிய அம்சமாகும்.

முறையான மதிப்பீடு, தொழில்முறை பரிவர்த்தணை ஏற்பாடு, போட்டித்தன்மைமிக்க விலை கண்டறிதல் ஆகியவற்றின் மூலம் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், இதர அரசு நிறுவனங்கள் உபரி சொத்துக்களின் பொருளாதார மதிப்பை அறிய உதவும். அரசின் சொத்து பணமாக்கல் திட்டத்தின் விரைவான நடவடிக்கைகளை இப்பரிந்துரைகள் பிரதிபலிக்கின்றன.

பரிந்துரைக்கப்பட்ட முன்மொழிவுகள் அமைச்சரவையால் ஒப்படைக்கப்பட்ட மாற்று வழிமுறையின் பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக முன்வைக்கப்படும். தேவையான ஒப்புதல்களை பெற்ற பின், பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளின்படி பணமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332934&reg=3&lang=1&_gl=1

***

AD/IR/PS/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333128) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: Bengali-TR , Bengali , English , Urdu , हिन्दी , Marathi , Nepali , Manipuri , Assamese , Gujarati