இடுகை இடப்பட்ட நாள்:
05 NOV 2026 2:30PM by PIB Chennai
புதுதில்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சி மாநாடு மற்றும் கண்காட்சி 2026-ன் போது ரயில்வே அமைச்சகத்திற்கு மதிப்புமிக்க பிரதமரின் சூரிய வீடு திறன் விருதை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வழங்கி கௌரவித்தார்.
பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் கீழ், மத்திய அமைச்சகங்கள், துறைகளில் பெரும் எண்ணிக்கையிலான கட்டிடங்களில் சூரியசக்தி ஏற்படுத்தப்பட்டவை என்ற பிரிவில் அந்த அமைச்சகம் முதல் இடத்தைப் பிடித்தது. இது பொதுத்துறை நிறுவனங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிப்பதில் முன்மாதிரியான தேசிய அளவிலான சாதனையாகும்.
நாடு முழுவதும் சூரிய தகடுகளை பொருத்தக்கூடியதாக 15,868 ரயில்வே கட்டிடங்களை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட கட்டிடங்களில் 79 சதவீதம் அளவிலான 12,495 கட்டிடங்களில் சூரியசக்தி அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. அத்துடன், 424 மெகாவாட் என்ற இலக்கில் தற்போது 351 மெகாவாட் திறன் கொண்ட சூரியசக்தி அமைப்புகள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
தேசிய அளவில் 77 மத்திய அமைச்சகங்கள், துறைகளின் கீழ், 39,135 கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 25,984 கட்டிடங்களில் சூரியசக்தி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது கண்டறியப்பட்ட மொத்த கட்டிடங்களில் 66 சதவீதமாகும். இந்த தேசிய அளவிலான சாதனையில் ரயில்வே அமைச்சகம் பெரும் பங்களிப்பு செய்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333012®=3&lang=1&_gl=1
***
AD/IR/PS/RJ