மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

முக்கிய கனிமங்களைச் செயல்பாட்டிற்குச் கொண்டு வருவதை ஊக்குவிப்பதற்கான மூலதனச் செலவு ஆதரவுத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 04 NOV 2026 3:29PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 5 ஆண்டுகளில் ரூ.2,814 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் முக்கிய கனிமங்களைச் செயல்பாட்டிற்குச் கொண்டு வருவதை ஊக்குவிப்பதற்கான மூலதனச் செலவு ஆதரவுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது லித்தியம், நிக்கல், கோபால்ட் போன்ற முக்கிய கனிமங்களுக்கான உள்நாட்டு செயல்பாட்டு கட்டமைப்புத் தொடக்க நிலையிலேயே இருப்பதால் சுத்திகரிக்கப்பட்ட இளநிலைப் பொருட்கள் மற்றும் உயர்தூய்மைமிக்க மூலப்பொருட்களுக்காக இந்தியா  பெருமளவில் இறக்குமதியைச் சார்ந்துள்ளது. உள்நாட்டில் இதுபோன்ற கனிமங்களைச் செயல்படுத்துவதற்கான திறன் குறைவாக உள்ளது. வணிக ரீதியிலான திட்டங்களுக்கு அதிக மூலதன தேவை, உரிய தொழில்நுட்பங்கள் கிடைப்பதில் சிக்கல்கள், மூலப்பொருட்களைப் பெறுவதில் உள்ள தடைகள் ஆகிய சவால்கள் உள்ளன. எனவே மதிப்புகூட்டுதலை அதிகப்படுத்தவும், இறக்குமதியைக் குறைக்கவும், வலுவான விநியோக முறையை உருவாக்கவும், உள்நாட்டுச் செயல்பாட்டுத் திறன் அவசியமாகும்.

இச்சூழலில் உள்நாட்டில் கனிமங்களைச் செயல்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கும், அவற்றுக்கான மூலதனச் செலவு ஆதரவை அளிக்கவும், முக்கிய கனிமங்களைச் செயல்படுத்துவதற்கான ஊக்குவிப்பு மூலதன செலவு ஆதரவுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் கனிமங்களைச் செயல்படுத்தும் திறனை மேம்படுத்தி உள்நாட்டில் மதிப்புக்கூட்டலை ஊக்குவிப்பதும், இறக்குமதிச் சார்பைக் குறைப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். இது லித்தியம், நிக்கல் அல்லது இடைநிலைப் பொருட்களை உயர்தூய்மைமிக்க சேர்மங்களாகச் செயல்படுத்துவதை இலக்காக கொண்டுள்ளது. நிக்கல் உற்பத்தியின் போது துணைப்பொருளான கோபால்ட்டை பிரித்தெடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மின்சார வாகனங்கள், பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்புகள், மின்னணுவியல், பாதுகாப்புத் துறை, சிறப்பு எஃகு போன்ற முக்கிய துறைகளுக்கு வலுசேர்க்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332476&reg=3&lang=1

***

AD/IR/SM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333038) வருகையாளர் எண்ணிக்கை : 11