பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சோமாலிய கடலோரப் பகுதியில் கடத்தப்பட்ட அஜினி மீன்பிடி படகை இந்தியக் கடற்படை வெற்றிகரமாக மீட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 03 NOV 2026 8:45AM by PIB Chennai

சோமாலிய கடலோரப் பகுதியில் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்கள் கடத்திய அஜினி என்ற மீன்பிடி படகை இந்தியக் கடற்படை 48 மணி நேரமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு பிறகு வெற்றிகரமாக மீட்டது. அதன்மூலம் படகிலிருந்த 20 பணியாளர்களும் உயிரிழப்போ, காயமோ இன்றி பாதுகாப்புடன் மீட்கப்பட்டனர்.

கடந்த மாத தொடக்கத்தில் சோமாலியாவின் வடகிழக்கு கடலோரத்திற்கு அப்பால் இந்த மீன்பிடி படகு கடத்தப்பட்டது. அதன்மூலமாக வர்த்தக கப்பல்களுக்கு எதிராக, மேலும் கடற்கொள்ளையர்கள் தாக்குதலை நடத்துவதற்கு அப்படகை பயன்படுத்த வாய்ப்பு இருந்தது.

இதையடுத்து இந்திய கடற்படை கடல்சார் உளவு விமானத்தின் ஆதரவுடன் போர்க்கப்பலை ஈடுபடுத்தியது. அவை படகின் இருப்பிடத்தை கண்டறிந்து அதை கட்டுப்படுத்தவும், கொள்ளையர்கள் தப்பி செல்வதை தடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

இந்திய விமானப்படையின் சி-17 விமானம் மூலம் கடற்படை வீரர்கள் கூடுதலாக ஈடுபடுத்தப்பட்டனர். விரைவான, முறையாக ஒருங்கிணைக்கப்பட்ட உத்திசார்ந்த நடவடிக்கை மேற்கொண்ட இந்திய கடற்படை அந்த படகை பாதுகாத்து அச்சுறுத்தலை முறியடித்து 20 பணியாளர்களும் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டதை உறுதிசெய்தது.
 

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331872&reg=3&lang=1&_gl=1

***

AD/IR/PS/SH 

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 2331982) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam